அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தொடரும் மழை பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கின


கடந்த சில நாட்களாக மன்னார் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பெரிய சிறிய நடுத்தர குளங்கள் அனைத்தும் நிறைந்து வான் பாய்வதனால் குள நீர் அனைத்தும் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட காணிகளுக்குள் நிறைந்துள்ளது இதனால் பல லட்சம் பெறுமதியான வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மாந்தை ,நானாட்டான் ,மடு ,முசலி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கி போயுள்ளன தொடர்சியாக நீர் வடிந்தோட முடியாத நிலையில் வயல் நிலங்களுக்குள்ளே தேங்கி காணப்படுவதால் அனைத்து முளை நிலையில் உள்ள பயிர்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்

சொந்த தேவைக்கு கூட நெல் பெற்று கொள்ள முடியாத நிலை உள்ளதாகவும் பல லட்சம் செலவு செய்த நிலையில் தாங்கள் தற்போது அனைத்தையும் இழந்த நிலையில் இருப்பதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவரண உதவிகளையாவது வழங்குமாறு பாதிக்கப்பட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

அதே நேரத்தில் நானாட்டான் பிரதேச சபைகுட்பட்ட கட்டைகாடு பகுதியை சேர்ந்த ஐந்து குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
https://youtu.be/9qi-SxNlRMY

மன்னார் தொடரும் மழை பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கின Reviewed by Author on December 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.