அண்மைய செய்திகள்

recent
-

பெண்களுக்கு கர்ப்பப்பையில் சதை கட்டி வருவது ஏன்-


கருக்குழாய்களில் ஏற்படும் அடைப்பிற்கு அடுத்த இடத்தில் இருப்பது, கர்ப்பப்பையில் ஏற்படும் ‘பைப்ராய்டு’ எனப்படும் சதைக் கட்டிகள் ஆகும்.
பெண்களுக்கு பொதுவாக கருப்பை கட்டிகள் 30 அல்லது 40 வயதிலேயே ஏற்படுகின்றன.

இது குழந்தையை கர்ப்பப்பையில் சுமக்கும் காலத்தில் இவ்வகை கட்டிகள் தோன்றுகின்றன எனப்படுகின்றது.
இது பொதுவாக ஆபத்தை விளைவிக்காது என்றாலும் வலியை ஏற்படுத்தலாம் என்பதால் அறுவை சிகிச்சை மூலம் இதை அகற்றுவது சிறந்ததாகும்.
அந்தவகையில் சதைக்கட்டிகள் ஏன் ஏற்படுகின்றது? இதனை தடுக்க என்ன செய்யலாம் என பார்ப்போம்.
சதைக் கட்டிகள் ஏற்பட காரணம் என்ன?
  • குழந்தை பருவத்தில் இருந்தே, நார்ச்சத்து உள்ள உணவுகள், கீரைகள் சாப்பிடாமல் இருப்பதே, சதைக்கட்டிகள் ஏற்பட காரணம்.
  • உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, நடக்காமல், ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பது, கூடுமான வரை நடப்பதைத் தவிர்ப்பது, உயரத்திற்கு ஏற்ப உடல் எடையுடன் இல்லாமல் இருப்பது இதற்கு காரணமாக அமைகின்றது.
  • இதனால் கர்ப்பப்பையில் சதைக் கட்டிகள், ரத்தத்தில் கெட்ட கொழுப்பு, ரத்த அழுத்தம், உடல் பருமன் என, வாழ்க்கை முறை மாற்றத்தினால் பல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிமாகின்றது.
அறுவை சிகிச்சை செய்து கொள்ளலமா?
சதைக் கட்டிகள், 1 செ.மீ., 2 செ.மீ., இருக்கும் போதே, அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
அறுவை சிகிச்சை செய்த நான்கைந்து மாதங்களில், மீண்டும் வளர்ந்து விடுகிறது. அதே நேரத்தில், உணவு பழக்கம் உள்பட, வாழ்க்கை முறை மாற்றத்தினால் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதற்கு என்ன செய்யலாம்?
  • காலை உணவில், எண்ணெயில் பொரித்த வடைகள், தேங்காய் சட்னி, மட்டன் குருமா என்று கொழுப்பு நிறைந்த உணவாகளை தவர்க்க வேண்டும்.
  • ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், ஆப்பம் என்று சாப்பிட வேண்டும்.
  • இட்லி எளிதில் செரிக்கும், எடையும் போடாது, பசியும் அடங்கும். இதற்கு, மல்லி தழை, வெங்காயம், பொட்டுக் கடலை, விரும்பினால் சிறிய துண்டு தேங்காய் வைத்து சட்னி செய்யலாம்.
  • மதிய உணவில், கண்டிப்பாக ஏதாவது ஒரு வகை கீரை இருக்க வேண்டும்.
  • முருங்கைக் கீரை, வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிடலாம்.
  • உடல் எடை குறைவாக இருந்தால், உணவிலேயே சதைக் கட்டிகளை சரிசெய்யலாம்.

பெண்களுக்கு கர்ப்பப்பையில் சதை கட்டி வருவது ஏன்- Reviewed by Author on December 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.