அண்மைய செய்திகள்

recent
-

சகல மதங்களின் தன்மைகளையும் உணர்ந்தால்தான் அவற்றின் நிலைத்த தன்மையை எடுக்கூற முடியும்-மேலதிக அரசாங்க அதிபர் S.குணபாலன்.

மதங்களின் தன்மைகளை நாம் உணர்ந்தால்தான் அவற்றின் நிலைத்த தன்மைகளையும் வரலாற்று பெருமைகளை இந்த மண்ணுக்கு நாம் எடுத்துக்கூற முடியும் என்ற செயல்பாட்டில் வாழ்ந்தவர்தான இந்த ஆறுமுக நாவலர் என மன்னார் மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் இவ்வாறு தெரிவித்தார்.

ஞாயிற்றுக் கிழமை (29.12.2019) மன்.சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி
மண்டபத்தில் மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இணையத் தலைவரானசெந்தமிழருவி மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் ஆறுமுக நாவலரின் விழாபத்தாவது ஆண்டாக மன்னாரில் கொண்டாடப்பட்டபோது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்
தொடர்ந்து பேசும்போது

மன்னார் மாவட்டத்தில் அறநெறி பாடசாலைகள் மிகவும் சிறப்பாக இயங்கிக்
கொண்டிருப்பதற்கு உதவிபுரிந்து வரும் எனது உத்தியோகத்தர்களுக்கு நான்
நன்றி கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

சைவமும் தமிழும் என்றும் பிரிக்க முடியாதபடி பிணைத்து ஒன்றாகவே
வழிநடத்தக்கூடிய பெருமை ஆறுமுக நாவரையே சாரும்.இன்றும் யாழ்ப்பாணத்தின் கலாச்சாரத்தை கந்தபுராண கலாச்சாரம் என உலகம்
போற்றும் தன்மைக்கு உண்ணதமான நிலைக்கு தோற்றுவித்தவர் நாவலர் அவர்களே.

மிகவும் குறைந்த வயது வரை அதாவது 57 ஆண்டுகளே நாவலர் உயிருடன் வாழ்ந்துள்ளார்.ஆனால் அவர் இவ்வுலகில் சாதித்தவை ஏராளம், ஏராளம். எங்கள் நாட்டில்மட்டுமல்ல இந்தியாவிலும் கடல் கடந்து மத்தின் பெருமைகளை பறைசாற்றி நாவலர் என்ற பட்டத்தையும்  பெற்றவர் இந்த ஆறுமுக நாவலர்.

அதுமட்டுமல்ல அவர் எல்லா மதங்களையும் மதித்தார் என்பதின் அடையாளமாக பாதிரியார் ஒருவருடன் இணைந்து விவிலியத்தை தமிழாக்கம் செய்து உலக தமிழ் மக்களுக்காக  இந்த ஆறுமுக நாவலர் வழங்கியுள்ளார்.

ஆகவே எல்லா மதங்களின் தன்மைகளை நாம் உணர்ந்தால்தான் அவற்றின் நிலைத்ததன்மைகளையும் வரலாற்று பெருமைகளை இந்த மண்ணுக்கு நாம் எடுத்துக்கூற முடியும் என்ற செயல்பாட்டில் வாழ்ந்தவர்தான இந்த ஆறுமுக நாவலர் அவர்கள்.பிரசங்கம் என்ற நிகழ்வினூடாகத்தான் இந்து மக்களின் பெருமைகளையும் தனித்துவ தன்மைகள் எல்லாம் இந்த ஈழநாட்டிலே உதயமாகியது. இந்த
முறைமையையும் கொண்டுவந்தவர் ஆறுமுக நாவலரே.

கடந்த காலத்தில் ஐரோப்பிய ஆட்சிக்காலத்தில் இந்து மதங்கள்
சிதறடிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்தவேளையில் மிசனரியூடாக
கத்தோலிக்க பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.

இதனால் தாங்கள் வாழ்க்கையில் வளமாக வேண்டும் என பலர் மதம் மாறினார்கள். இதனால் அவர்கள் தங்கள் வாழ்வில் பல வசதிகளையும் அந்தஸ்களையும் பெற்று வந்தனர்.

இந்தவேளையில் தனது ஆசிரியர் பதவியையும் துறந்து சமய, சமூக சேவையில் நிலைத்தவர்தான் ஆறுமுக நாவலர்.

இவர் எத்தனையோ பாடசாலைகளை தோற்றுவித்துள்ளார். அத்துடன் ஏட்டிலுள்ள பல இலக்கியங்களை இன்றும் எங்கள் சந்ததினர் போற்றி வணங்குவதற்கு அச்சு வடிவத்தில் கொண்டுவந்த பெருமைக்குரியவர் ஆறுமுக நாவலரே.

உலகத்திலே சைவத் தமிழையும் விரதத்தினையும் பிரகாசிக்கச் செய்தார்.
மன்னாரில் 350 ஆண்டுகளாக மணல் மேடாக இருந்த இடத்தில் அங்கு தேர்கொண்டு இருக்கின்றது என சுட்டிக்காட்டி திருக்கேதீச்சரத்தை அடையாளப்படுத்தினார்.

மன்னார் மாவட்டத்தில் நாம் பெருமை அடைய வேண்டிய விடயம் குறைந்தளவு இந்து சமய மக்கள் இருக்கின்றபோதும் சைவத்தை போற்றி புகழுகின்ற இதைக் கட்டி காக்கினற் ஒவ்வொரு மக்களின் செயல்பாடடினையும் நாம்  போற்றத் தகுந்தது.

கம்பன் விழா கொண்டாடுகின்றபோது இராமாயணத்தினதும் ஆறுமுக நாவலர் விழா கொண்டாடுகின்றபோது சைவத் தமிழ் இவற்றின் அர்த்தங்களை நாம் தெரிந்துகொள்ள வழி சமைக்கப்படுகின்றது.

திருவள்ளுவர் தினம் கொண்டாடுகின்றபோது தமிழரின் பண்பாடுப்பற்றி
பேசப்படுகின்றது. ஆகவே இவ்வாறு நிலைகளில் நமது கலாச்சாரத்தை பேணி
பாதுகாக்கும்போதுதான் இந்த மாதோட்டம் சிறப்புறும்.
நாம் இந்த பழமைவாய்ந்த சரித்திரங்கள் கலாச்சாரங்கள் அழிவுறக்கூடாது
என்பதால்தான் நாங்கள் நூல் வடிவத்தில் கொண்டு வந்துள்ளோம்.

ஏனென்றால் எமது வரலாறு மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டு விழுமியங்கள் எல்லாம் புதைக்கப்படும் நிலை இவ் மண்ணில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என இவ்வாறு தெரிவித்தார்.


சகல மதங்களின் தன்மைகளையும் உணர்ந்தால்தான் அவற்றின் நிலைத்த தன்மையை எடுக்கூற முடியும்-மேலதிக அரசாங்க அதிபர் S.குணபாலன். Reviewed by Author on January 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.