அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரித்துவரும் டெங்கு நோயாளர்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வரும்நிலையில், கடந்த டிசம்பர் 27ஆம் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 03ஆம் திகதி வரை 216 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்தவாரம் டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 32 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அது போன்று ஆரையம்பதி 39 பேர், களுவாஞ்சிக்குடி 36 பேர், வாழைச்சேனை 30 பேர், செங்கலடி 16 பேர், காத்தான்குடி 15 பேர், ஏறாவூர் 12 பேர், வெல்லாவெளி 10 பேர், வவுணதீவு 08 பேர், பட்டிப்பளை 07 பேர், ஓட்டமாவடி 05 பேர், கோரளைப்பற்று மத்தி 03 பேர், வாகரை 02 பேர் மற்றும் கிரான் 01 பேர் ஆகிய பகுதியில் அடையாளம்காணப்பட்டுள்ளனர்.

இதில் குறிப்பாக களுவாஞ்சிகுடிப் பகுதியில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.
மொத்தமாக கடந்தவாரம் 216 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம்கொடுக்காத வகையில் சுத்தமாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிபனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரித்துவரும் டெங்கு நோயாளர்கள் Reviewed by Author on January 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.