அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகப்பெரிய பணக்காரர்-குறைவான நிதியை அவுஸ்திரேலிய தீக்கு வழங்கியதால் சர்ச்சை -


அமேசான் நிறுவனத்தின் தலைவர், Jeff Bezos அவுஸ்திரேலியா காட்டுத் தீக்கு 1மில்லியன் டொலர்கள் மட்டும் நிவாரணம் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் தலைவர், Jeff Bezos பல பில்லியனுக்கு சொந்தமானவர். அவருக்கு கிட்டத்தட்ட $117 அளவிற்கு சொத்துக்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால், அவர் அவுஸ்திரேலிய காட்டுத் தீ நிவாரணத்திற்கு 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் மட்டும் நிவாரணமாக வழங்கியுள்ளார்.
இது இந்திய மதிப்பில் 4.8கோடியும், அமெரிக்க டொலர் மதிப்பில், 690,000 மட்டுமே.
இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “அவுஸ்திரேலியாவின் கொடும் காட்டுத் தீக்கு அமேசான், 1மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வழங்கியுள்ளது. இதுபோன்று வாடிக்கையாளர்களும் முன்வந்து உதவவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு சிலர், இவ்வளவு பணம் வைத்திருக்கும் நீங்கள் குறைந்த தொகை வழங்கியதற்கு பணம் வழங்காமலே இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒருவர், “கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் மட்டும் அமேசான் 1பில்லியன் டொலர் சம்பாதித்துள்ளது. அதற்று 20மில்லியன் மட்டுமே வரி கட்டியுள்ளது. அதில், அமேசான் 30 சதவிகிதம் கார்ப் வரியை செலுத்தியிருந்தால் 300மில்லியன் வரி செலுத்த வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்-குறைவான நிதியை அவுஸ்திரேலிய தீக்கு வழங்கியதால் சர்ச்சை - Reviewed by Author on January 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.