அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உள்ள கிராமங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்-மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு-

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று ஞாயிற்றுக்கிழமை 05/01/2020 மன்னார் மாவட்டத்திற்கு திடீர் விஜயம் செய்த நிலையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டடு அறிந்து கொண்டார்.

அதனடிப்படையில் மன்னார் பேசாலை கிராமத்திற்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் கேட்போர் கூடத்தில் மக்கள் சந்திப்பில் ஈடு பட்டார்.

இதன் போது பேசாலை கிராமத்தில் உள்ள பொது அமைப்புக்கள்,மீனவ அமைப்புக்கள்,ஆலைய பிரதி நிதிகள் மற்றும் பேசாலை பங்குத்தந்தை ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இதன் போது கலந்து கொண்ட மக்களும் அமைப்புக்களின் பிரதி நிதிகளும் பல்வேறு பிரச்சினைகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதே வேளை பேசாலை கிராமத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவ அமைப்புக்களின் சகல பிரதி நிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

குறிப்பாக பேசாலை பகுதியில் யுத்த காலத்தின் போது அழிக்கப்பட்ட படகுகளுக்கான நஸ்ட ஈடுகள் எவையும் பாதீக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற கருத்தை மீனவ சங்க பிரதி நிதிகள் அமைச்சரிடம் முன் வைத்தனர்.

எனினும் மக்கள் மற்றும் மீனவர்கள் முன் வைத்த கருத்துக்களை கேட்டு அறிந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 'என்னை நம்பியவர்களை' குறிப்பாக 'என்னை நம்பி வந்த மக்களை நான் ஒரு போதும் கை விடுவதில்லை' என தெரிவித்தார்.

எனவே மக்களின் பிரச்சினைகளை நான் ஆராய்ந்து நிவர்த்தி செய்வேன் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் உள்ள கிராமங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்-மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு- Reviewed by Author on January 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.