அண்மைய செய்திகள்

recent
-

மோசடியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை!

வடமாகாண சபையின் முன்னால் உறுப்பினரும், முன்னால் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரருமான     முஹமட் றிப்கான் பதியுதீனை  கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சி.ஐ.டியினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 ஏக்கர் காணியை போலி காணி உறுதிப்பத்திரங்களை தயார் செய்து கையக்கப்படுத்திக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இடம் பெறும் விசாரணைகளில், வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய றிப்கான் பதியுதீனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அவரை தேடி வருவதாக சி.ஐ.டி.யினர் நீதமன்றில் தெரிவித்துள்ளனர்.

-மன்னாரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அவர் தொடர்பாக விசாரித்ததாகவும் அவர் வர்த்தக நடவடிக்கைக்காக கொழும்புக்கு சென்றுள்ளதாக  அவரது தயார் கூறிய போதும், றிப்கானின்  தொலைபேசியும் செயழிழந்துள்ளதாக சி.ஐ.டி.யினர் மன்றுக்கு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக விசாரணைகளை புறக்கணித்துள்ள றிப்கான பதியுதீனை  கைது செய்ய தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சி.ஐ.டி.யினர் அறிவித்துள்ளனர்.

மோசடியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை! Reviewed by Author on January 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.