அண்மைய செய்திகள்

recent
-

புற்றுநோய் கலங்களை அழிக்க புதிய தொழில்நுட்பத்தினை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்-

மனிதர்களில் ஏற்படும் மிகக்கொடிய நோய்களுள் ஒன்றாக புற்றுநோய் காணப்படுகின்றது.
இந்நோயை குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்த வரிசையில் அல்ட்ரா சவுண்ட் பயன்படுத்தி புற்றுநோய் கலங்களை அழிக்கும் தொழில்நுட்பத்தினை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
California Institute of Technology மற்றும் City of Hope Beckman Research Institute என்பனவற்றின் ஆராய்ச்சியளர்கள் இணைந்தே இத் தொழில்நுட்பத்தினை உருவாக்கியுள்ளனர்.
இத் தொழில்நுட்பம் பரிசோதனையின்போது புற்றுநோய் கலங்களை அழித்துள்ளது.

எனினும் ஆரோக்கியமான கலங்களையும் சேர்த்து அழித்துள்ளதனால் ஆராய்ச்சியாளர்கள் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே ஆரோக்கியமான கலங்களை பாதிக்காது புற்றுநோய் கலங்களை மாத்திரம் அழிக்கக்கூடிய வகையில் அல்ட்ரா சவுண்ட்டினை பயன்படுத்துவது தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

புற்றுநோய் கலங்களை அழிக்க புதிய தொழில்நுட்பத்தினை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்- Reviewed by Author on January 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.