அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ்-ஆளும் கட்சி,எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் இணைந்து செயல்பட வேண்டும்-

சபைகளிலே இருக்கின்ற அனைவரும் ஆளும் கட்சி,எதிர்க்கட்சி என்ற வேறு பாடுகள் இல்லாமல் அனைவருமே இணைந்து மக்களுடைய சேவையினை முடக்காது செயல்படுவதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

-2018 ஆம் ஆண்டு வட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதி உதவியுடன் மன்னார் அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்ட மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க அலுவலக கட்டிடம் திறக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை 27-01-2020 காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது.

-குறித்த கட்டிடத்தை வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

-பின்னர் உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,,

'கூட்டுறவே நாட்டுறவு' என்று சொல்வார்கள்.நீங்கள் எல்லோறும் இணைந்தால் தான் ஒரு பிரதேசத்தை, மாவட்டத்தை, ஒரு மாகாணத்தை உயர்த்த முடியும் என்ற சிந்தனை உங்கள் அனைவருடைய மனதிலும் இருக்கின்றது.

ஒரு மாகாணத்தை எடுத்துப் பார்த்தால் அந்த மாகாணத்திலே அடிப்படையிலே இயங்கி வருகின்ற அமைப்புக்களில் மூன்று அமைப்புக்களை நாங்கள் கூற முடியும்.

கூட்டுறவு,கிராம, மாதர் அபிவிருத்தி சங்கங்கள்,மற்றும் பிரதேச சபைகள் ஆகியவற்றில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றவர்கள் அதிக அளவில் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள்.

-மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் பிரதி நிதிகளாக மக்களின் சேவைகளை முன்னெடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவருடைய எதிர் பார்ப்பும்.எக்கருத்துக்களை கொண்டவர்களாகவும் இருக்கலாம்,எந்த கட்சியை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம்,எந்த மதத்தையும், இனத்தையும் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.

-அந்த பிரதேசத்தில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் தமது கிராமங்களின் பிரதி நிதிகளாக அனுப்புகின்றனர்.

-கடந்த வாரத்தில் இந்த மாகாணத்திலே இரண்டு பாரிய பிரச்சினைகள் இடம் பெற்றுள்ளது.யாழ் மாநகர சபையிலே மூன்று நாட்களாக குப்பைகளை எடுக்கவில்லை.அதே போல வவுனியா நகரத்திலே தொடர்ந்து ஒரு வாரம் குப்பைகள் அகற்றப் படவில்லை.

இதற்கு பின்னனியாக என்ன காரணங்கள் இருந்தாலும் சபைகளிலே இருக்கின்ற அனைவரும் அதாவது ஆளும் கட்சி,எதிர்க் கட்சி என்ற வேறு பாடுகள் இல்லாமல் அனைவருமே இணைந்து மக்களுடைய சேவையினை முடக்காது செயல்படுவதற்கு ஆதரவு வழங்க வேண்டும். இதனைத்தான் நாங்கள் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம்.

-நாங்கள் அரச சேவையினை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் மக்களின் பிரதி நிதிகள் உங்களின் ஒத்துழைப்புக்களை எங்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும்.

இல்லாது விட்டால் அந்த சேவை அடி மட்டத்தில் மக்களை சென்றடையாது.

அந்த வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விவசாயிகளின் நெல்லிற்கான உரிய விலையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என என்னிடம் கேட்டுக்கொண்டார்.

அண்மையில் கொழும்பில் ஜனாதிபதி, ஆளுனர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி இருந்தோம்.

அக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மிக முக்கியமாக எங்களிடம் கூறிய விடையம் நாட்டில் இருக்கின்ற அனைத்து விவசாயிகளினுடைய நெல்லையும்.உரிய விலையில்,உரிய நேரத்தில் கொள்வனவு செய்யும்படி வலியுறுத்தி உள்ளார்.

-அதற்கான சுற்று நிருபங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நெல்லின் விலையும் ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் நெல் சரியாக காயவைக்கப்பட்டால் ஒரு கிலோ 50 ரூபாவிற்கும்,ஈரப்பதன் கொண்ட நெல் ஒரு கிலோ 47 ரூபாவிற்கும் நெல்லை கொள்வனவு செய்ய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

-உடனடியாக அரசாங்க அதிபரின் அனுசரனையுடன் கூட்டுறவுச் சங்கங்களை உடனடியாக நெல்லை குறித்த விலைக்கே கொள்வனவு செய்வதற்கான உத்தரவை வழங்கியுள்ளேன்.

அவர்களுக்கான நிதி வசதிகள்,நிதி ஏற்பாடுகள் அரச அதிபர்,பிரதம செயலாளர் ஆகியோரின் ஆலோசனைகளுடன் உடனடியாக செய்துகொடுக்கப்படும்.எனவே உங்களுடைய நெல்லை உரிய விலைக்கு விற்பனை செய்ய நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.என தெரிவித்தார். குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர்,திணைக்கள தலைவர்கள்,மாவட்ட அரசாங்க அதிபர்,மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர்,மந்தை மேற்கு பிரதேச செயலாளர், பலநோக்கு கூட்டுறவுச் சங்க பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










மன்னாரில் வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ்-ஆளும் கட்சி,எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் இணைந்து செயல்பட வேண்டும்- Reviewed by Author on January 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.