அண்மைய செய்திகள்

recent
-

`கொரோனாவுக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்த 3 பெண்கள்!'- `செங்கொடி' விருதை அறிவித்த சீனா


கொரோனா வைரஸ் நோய்த்தாக்கத்துக்கு எதிராக முன்னணியில் நின்று போராடியதற்காகச் சீனாவைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு அவர்களது மறைவுக்குப் பிறகு `செங்கொடியை ஏந்தியவர்கள்' விருது (Bearer of Red flag) அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விருது குறித்த அறிவிப்பை சீனாவின் அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. சீனாவின் நான்ஜிங் மருத்துவமனையின் துணைத் தலைமை மருத்துவர் சூ ஹூய், கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்துக்கு எதிரான சிறப்பு மருத்துவக்குழு ஒன்றும் இவர் தலைமையில் இயங்கி வந்தது. கொரோனா நோய்த்தாக்கம் ஏற்பட்ட பகுதிகளில் முன்னணியில் நின்று தொடர்ந்து 18 நாள்கள் பணியாற்றிய நிலையில் கடந்த பிப்ரவரி 7 அன்று திடீர் உடல்நலக்குறைவால் இறந்தார்.

இவரைப் போலவே தென்மேற்கு சீனாவின் குய்சூ மாகாணத்தின் உள்ளூர் அதிகாரியான ஹுவான் ஹியான் தனது கிராமமான யுன்வூ பகுதியில் வீடுவீடாகச் சென்று கொரோனா தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தொடர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் தனிநபராகச் சென்று பரிசோதனையும் மேற்கொண்டார். ஆனால், கடந்த 2 பிப்ரவரி அன்று அவரும் நோய்த்தாக்கத்தால் மறைந்தார்.

.`விரைவில் குணமடைவீர்கள், டேக் கேர்!' - கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்.<p>மற்றொருவரான ஜியாங் நா வடகிழக்குச் சீனாவின் குயாங்ஹாவ் நகரத்தின் பெண்கள் கூட்டமைப்பின் செயலாளர். கடந்த 19 வருடமாகத் தனது சமூகத்துக்காகப் பணியாற்றி வருபவர். இவர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருந்து எடுத்துச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சூ ஹூய், ஜியாங் நா மற்றும் ஹுவான் ஹியான் ஆகிய மூவரும் கொரோனாவுக்கு எதிராகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடி மக்களைக் காப்பாற்றி வரும் எண்ணற்றச் சீனப் பெண்களுக்கு உதாரணம் எனச் சீனப் பெண்கள் கூட்டமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. </p><p>இது சீனப் பெண்களுக்காகத் தரப்படும் உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.
`கொரோனாவுக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்த 3 பெண்கள்!'- `செங்கொடி' விருதை அறிவித்த சீனா Reviewed by Author on February 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.