அண்மைய செய்திகள்

recent
-

விக்கிப்பீடியா: அனைத்து இந்திய மொழிகளையும் வீழ்த்தி முதலிடம் பிடித்த 'தமிழ்'


விக்கிப்பீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய கட்டுரை போட்டியில் அனைத்து இந்திய மொழிகளையும் வீழ்த்தி தமிழ் முதலிடம் பிடித்துள்ளது.

'வேங்கைத் திட்டம் 2.0' என்ற பெயரில் விக்கிப்பீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டு அக்டோபர் 10 முதல் 2020 ஜனவரி 10 வரை கட்டுரை போட்டி ஒன்றினை நடத்தியது.
இதில் ஒவ்வொரு மொழியினரும் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் முன்னூறு வார்த்தைகளுக்கு எழுத வேண்டும். நேரடியாக கூகிள் மொழிபெயர்ப்போ அல்லது இதர எந்திர மொழிபெயர்ப்போ பயன்படுத்தக் கூடாது என்பதே போட்டியின் விதி.

கடந்த ஆண்டு முதல்முறையாக நடந்த போட்டியில் பன்னிரண்டு மொழியினர் போட்டியிட்டனர். ஆனால் தமிழ் விக்கிப்பீடியா இரண்டாம் இடம் தான் பெற முடிந்தது. பஞ்சாபி மொழி முதலிடம் பிடித்தது. இது தமிழ் விக்கிப்பீடியா ஆர்வலர்களுக்கிடையே வருத்தத்தை அளித்தது.
இந்த நிலையில் தற்போது நடந்த போட்டியில் தமிழ் மொழியானது, இந்திய மொழிகள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
போட்டிக்கான காலகட்டத்தில் அதிகபட்ச கட்டுரைகள் மட்டுமின்றி, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையிலும் தமிழ் மொழி முதலிடத்தை பெற்றுள்ளது.

விக்கிப்பீடியா: அனைத்து இந்திய மொழிகளையும் வீழ்த்தி முதலிடம் பிடித்த 'தமிழ்' Reviewed by Author on February 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.