அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கல்வி வலயம் ஆசிரியர் பற்றாக்குறையிலும் முன்னிலையில் திகழ்கின்றது. K.J.பிறட்லி கல்வி வலயப் பணிப்பாளர்

மன்னார் கல்வி வலயத்தில் கல்வித் துறையில் ஆசிரியர் பற்றாக்குறை 21 வீதம் வெற்றிடமாக இருக்கின்றது. 7000 தளபாடங்கள் குறைவாக இருக்கின்றது. இவ்வாறு பற்றாக்குறைகள் காணப்படுகின்றபோதும் ஆசிரியர்கள் நிறைந்துள்ள யாழ் மாவட்டத்தைவிட மன்னார் மாவட்டம் முன்னனியிலேயே இருக்கின்றது என மன்னார் கல்வி வலயப் பணிப்பாளர் K.J.பிறட்லி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி வியாழக் கிழமை (07.02.2020) நடைபெற்றபோது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இவ் பாடசாலையின் 150 வது ஆண்டு பூர்த்தி விழாவை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ் பாடசாலைக்கு ஒரு மகிழ்ச்சி நிறைந்த நாளாகவும் இவ் விளையாட்டுப் போட்டி இருக்கின்றது.

வழமையாக விளையாட்டு என்றால் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி. தங்கள் பிள்ளைகளின் விளையாட்டுக்களை கவனிப்பதில் பெற்றோருக்கு மகிழ்ச்சி. அதிபர் ஆசிரியர்களுக்கு இந்த கல்வி ஆண்டுடைய விளையாட்டுப் போட்டியை ஒருவாறு நிறைவேற்றி விட்டோம் என்ற மகிழ்ச்சி.

இவ்வாறு பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறான மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியானது மனித வரலாற்றில் ஒரு நீண்ட காலத்து தேடல். மன்னார் மாவட்டத்தில் ஒரு லட்சத்து அறுபத்தையாயிரம் மக்கள் வாழ்கின்றனர்.

இப் பகுதியில் வாழுகின்ற மக்களின் மகிழ்ச்சிக்காக பலரும் செயல்பட்டு வருகின்றனர். பல அபிவிருத்திகள் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.

வங்கி சேவைகள் வர்த்தக நிலையங்கள் விரிவடைகின்றன. இங்குள்ள மக்களின் மகிழ்ச்சிக்காக பலதரப்பட்டவர்கள் தங்கள் கடமைகளை மேம்படுத்தி வருகின்றனர்.
1981க்கும் 2012 க்குமிடையே புள்ளி விபரத்தின்படி 15 வீதத்திலிருந்து 20 வீதமாக வீட்டு வசதிகள் உருவாகியுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாயிரம் ஆண்டுகளில் மன்னார் மாவட்டத்தில் மொத்த சனத்தொகையில் மீனவர்களின் செயல்பாடுகள் 19.7 வீதம். ஆனால் 2018 இல் இவ் வீதம் 9.7 ஆகும்.

இப்பொழுது மக்கள் அதிகமானோர் சேவை தொழில்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். ஆகவே வளர்ச்சியும் கட்டமைப்பு மாற்றங்கள் அடைந்து கொண்டிருக்கின்றது.

இருந்தபோதும் நாம் இன்றும் முன்னோக்கி செல்ல வேண்டும். மேல் மாகாணத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் 36 வீதம் வழங்க மன்னார் மாவட்டம் 3 வீதமான பங்களிப்பையே வழங்குகின்றோம்.

எனவே நாம் முன்னோக்கி வளர்ச்சி அடைய வேண்டிய தேவையுள்ளது என்பதை இது சுட்டிக்காட்டி நிற்கின்றது. இந்த வளர்ச்சிப் பாதையில் எமக்கு பலவித சவால்கள் இருக்கலாம். ஓவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதமான சவால்கள் இருக்கலாம்.

கல்வித் துறையில் ஆசிரியர் பற்றாக்குறை 21 வீதம் வெற்றிடமாக இருக்கின்றது. மன்னார் வல்வி வலயத்தில் மட்டும் 7000 தளபாடங்கள் குறைவாக இருக்கின்றது.

இந்த வகையில் எமது இந்த வலயத்தில் வளர்ச்சி குறைவாகவும் பல சவால்களும் காணப்படுகின்றது. இவ்வாறு பல துறைகளிலும் பலவிதமான சவால்கள் இருக்கும்.

இந்த வளர்ச்சிகளுக்காகவே இவ் மாவட்டத்தில் பலரின் முயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்து வருகின்றன. கல்வித் துறையில் வளங்களும் பற்றாக் குறைகளின் மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் ஒரு மகிழ்ச்சியான விடயம் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆசிரியர்கள் அதிகமாக இருக்கின்றபோதும் போடடியில் மன்னார் மாவட்டம் முன்னனியில் இருக்கினறது.

மன்னார் மாவட்டம் முதலாவது இரண்டாவது இடங்களில் இருக்கினறது. யுhழ்ப்பாணத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறிப்பிட்டவற்றைவிட அதிகம். ஆனால் மன்னார் மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை 21 வீதம் குறைவு.

ஆனால் கல்வி பொது தராதர சாதாரணம், உயர்தரத்தில் மன்னார் மாவட்டம் 1வது 2வது இடங்களிலேயே இருக்கின்றன.

இங்கு ஆசிரியர்களின், அதிகாரிகளின் அர்ப்பணிப்பு சேவையே காரணமாகும். இந்த வளர்ச்ப் பாதையில் நாம் தொடர்ந்து நகர வேண்டுமானால் எல்லாம் எங்கள் கைகளில்தான் இருக்கின்றது.

ஆகவே தொடர்ந்து இந்த மாவட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு உங்கள் ஒவ்வொருவரினதும் அர்ப்பணிப்பு மிகவும் அவசியம்.

இதற்கு மாணவர்களாகிய உங்கள் கல்விதான் மூலதனமாக இருக்கும். நெல்சன் மண்டேலா கூறியது போன்று கல்விதான மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக இருக்கிறது என்கின்றார்.

இது சமூகத்துக்கு மாத்திரமல்ல ஒங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பெரும் உதவியாக இருக்கும். யுத்தமுனையில் இராணுவத்தினர் நாட்டை காப்பாற்ற தங்கள் உயிர்களை பணயம் வைக்கின்றனர்.

ஆனால் கல்வி அப்படியல்ல அது நாட்டையும் உங்களையும் மேம்படுத்துவதாகவே அமையும். அகவே மாணவர்களாகிய நீங்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்வியில் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

மன்னார் கல்வி வலயம் ஆசிரியர் பற்றாக்குறையிலும் முன்னிலையில் திகழ்கின்றது. K.J.பிறட்லி கல்வி வலயப் பணிப்பாளர் Reviewed by Author on February 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.