அண்மைய செய்திகள்

recent
-

பேசும்போது வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகின்றதா? அதனை எப்படி தடுக்கலாம்? -


ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள்.
காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும். இது எதிரில் இருப்பவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.
வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.
அதுமட்டுமின்றி புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் ஏற்படுகின்றது.
அந்தவகையில் இதிலிருந்து விடுபட சில எளிய முறைகள் பற்றி பார்ப்போம்.



  • ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பிறகு சிறிதளவு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிட வேண்டும்.
  • பேக்கிங் சோடாவும் துர்நாற்றத்திற்கு சிறந்த நிவாரணியாகும். ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து வாய் கொப்பளித்து வரலாம். பல் துலக்கியபிறகும் பயன்படுத்தலாம்.
  • ஒரு டம்ளர் சுடுநீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து வாய் கொப்பளித்து வரலாம். அது வாய்க்கு புத்துணர்வு கொடுக்கும். துர்நாற்றத்தை போக்க உதவும்.
  • சிறிதளவு லவங்கப்பட்டை தூளை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வரலாம். அதனுடன் ஏலக்காயையும் சேர்த்துக்கொள்ளலாம். விரைவாக நல்ல பலன் கிடைக்கும்.
  • ஒரு டம்ளர் சுடுநீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து வாய் கொப்பளித்து வரலாம்.
பேசும்போது வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகின்றதா? அதனை எப்படி தடுக்கலாம்? - Reviewed by Author on February 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.