அண்மைய செய்திகள்

recent
-

கருணாவிற்கு பத்து நாட்கள் காலக்கெடு வழங்கியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் -


கருணா, அவருக்கு இருக்கின்ற சக்தியை பிரயோகித்து அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுப்பாராக இருந்தால் நான் அவரைப் பாராட்டுவேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழர் விடுதலை கூட்டணியின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் எதிர்கால நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடையே எவ்வாறாக இந்த தேர்தலில் முகம் கொடுப்பதற்கான சிந்தனை உள்ளது என்பதனை அறிந்து கொள்வதற்குமான விடயமாக தான் கிழக்கு மாகாண விஜயத்தை மேற்கொண்டு இருக்கின்றோம்.
நாங்கள் அம்பாறை மாவட்டத்தின் உள்ள சிவில் சமூகம், அரசியல் பிரமுகர்களையும் இன்று சந்தித்துள்ளோம்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் மிக நீண்டகால பிரச்சினை. கடந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு பல உறுதிமொழிகளை வழங்கி இருந்தது.

ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை. இந்த அரசாங்கமும் தேர்தல் காலங்களில் கடந்த அரசாங்கத்தைப் போல் உறுதிமொழிகளை வழங்கியிருந்தது . அந்த உறுதிமொழியை கேட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என இன்றுவரை உறுதியாக நம்பி இருக்கின்றனர்.
குறிப்பாக இந்த வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.
ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் கொடுத்த வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்பதை நான் உறுதிபட நம்புகிறேன்.
அதேசமயம் இந்த அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் அவ்வாறு இந்த தேர்தலை எதிர்கொள்வது தமிழ் மக்கள் எவ்வாறான விடயங்களை இங்கு எதிர்நோக்குகிறார்கள் என்பன பிரதானமாக நோக்கப்படுகின்றன.
இங்குள்ள மக்கள் பல கிராமங்களை இழந்துள்ளார்கள் இழந்து கொண்டு வருகிறார்கள். மிக முக்கியமாக பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பு அவர்களுக்கான வேலைவாய்ப்பு போன்ற படங்கள் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களிலிருந்து தடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையும் இங்கு நிலவுகிறது.

இவை அனைத்தும் உள்ள சிவில் சமூகங்கள், பொதுமக்களாலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள். எங்களது புதிய தமிழ் மக்கள் கூட்டணிக்குள் கிழக்கு மாகாண மக்களது பிரச்சினைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதிக்க உள்ளோம்.
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரே ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் தான் வரக்கூடிய சாத்தியக்கூறு இருக்கின்றது.
இதனை ஏனைய அனைத்து கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும். பிரிந்தால் வரப்போகின்ற ஒரே ஒரு பிரதிநித்துவத்தை கூட இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனை அனைத்து தமிழ் கட்சிகளும் சிந்தித்து செயற்பட வேண்டும்.
சாய்ந்தமருதிற்கு மாநகரசபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் 30 வருடங்களாக கோரிக்கையாக இருக்கிற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இன்றுவரை ஒரு முழுமையான பிரதேச செயலகமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

இங்கு இருக்கின்ற ஒரு தொகுதி அரசியல்வாதிகள் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை சிறந்த ஒரு விடயமல்ல. சாய்ந்தமருதுக்கு ஒரு நகரசபை கிடைத்திருப்பது நல்ல ஒரு விடயம். ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழுமையான ஒரு பிரதேச செயலகமாக தரம் உயர்த்தி வழங்கப்படாமல் இருப்பது ஒரு வருந்தத்தக்க செயல்.
சாய்ந்தமருது நகரசபை வழங்கப்பட்டிருக்கிறது, தமிழ் மக்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏனெனில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மூன்று தசாப்தகாலமாக அந்த மக்களின் போராட்டமாக இருக்கின்றது.

தமிழ் மக்கள் எப்போதுபோது சந்தோஷப்படுவார்கள் என்றால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தினால் மாத்திரமே.
எங்கேயோ இருக்கும் ஒரு பிரதேசத்திற்கு நகர சபையோ அல்லது சேவையை வழங்குவதால் தமிழ்மக்கள் சந்தோஷப்பட மாட்டார்கள்.
இந்த மக்களுக்கு ஏதும் இந்த அரசாங்கம் செய்ய விரும்பினால் இந்த பிரதேச செயலகத்தை தரமுயத்தி வழங்க வேண்டும்.

பிரதமர் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். கருணா அவருக்கு இருக்கின்ற சக்தியை பிரயோகித்து அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுப்பாராக இருந்தால் நான் அவரைப் பாராட்டுவேன் என கூறியுள்ளார்.
கருணாவிற்கு பத்து நாட்கள் காலக்கெடு வழங்கியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் - Reviewed by Author on February 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.