அண்மைய செய்திகள்

recent
-

1000000 அமெரிக்கர்களை காப்பாற்ற முடியும்-ட்ரம்ப் -


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தற்போதுள்ள வைத்தியசாலைககள் மற்றும் வசதிகள் போதுமானவை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.

அடுத்து ஒரு மாதத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படவுள்ள காப்பு நடவடிக்கைகளின் மூலம் 10 லட்சம் அமெரிக்கர்களை காப்பாற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வத்திகானில் பாப்பரசர் பிரான்ஸிசுடன் பணியாற்றும் கர்தினால் அஞ்சலோ டி டொனாடிஸ் என்பவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
எனினும் அண்மைகாலத்தில் அவர் பாப்பரசருடன் தொடர்புகளை கொண்டிருந்தாரா என்பது தெரியவரவில்லை

பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான 418 பேர் மரணமமாகினர். இதனையடுத்து அங்கு மரணமானோரின் எண்ணிக்கை 3024 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்பெய்னில் மரணங்கள் எண்ணிக்கை 7340ஐ எட்டியபோதும் புதிய தொற்றாளிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டு வருவதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தாலியில் மரணங்களின் எண்ணிக்கை 11591ஆக உயர்ந்துள்ளது. பிரித்தானியாவில் 180 பேர் மரணமானநிலையில் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1408ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் இளவரசர் சார்ல்ஸ் கொரொனா வைரஸ் தனிமைப்படுத்தல் கண்காணிப்பில் இருந்து வெளியேறியுள்ளார்.
எனினும் சோதனைகளில் எவ்வித கொரொனா வைரஸ் உறுதி இல்லாதபோதும் ஜேர்மன் அதிபர் அஞ்சலோ மேக்கல் தொடர்ந்தும் சுயதனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
1000000 அமெரிக்கர்களை காப்பாற்ற முடியும்-ட்ரம்ப் - Reviewed by Author on March 31, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.