அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றுநோயை வென்ற 100 வயதான சீன நோயாளி!


கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 100 வயது சீன நோயாளி குணமடைந்துள்ளார்.
உலகெங்கிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸிற்கு 1,00,00க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக வயதான நபர்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வெடிப்பின் மையமான வுஹானில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 100 வயது சீன நபர், முழுமையாக குணமடைந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
Xinhua செய்தி நிறுவனத்தின் தகவல்படி, பிப்ரவரி 24 ஆம் திகதி அன்று அந்த முதியவர் ஹூபேயின் மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் போன்ற சுவாச நோய் தவிர, அந்த வயதான நோயாளிக்கு அல்சைமர் நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் இருந்தன.
அவர் 13 நாட்கள் சிகிச்சையை மேற்கொண்டார். அதில் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், பிளாஸ்மா மாற்றங்கள் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவம் ஆகியவை அடங்கும்.

முழுவதும் குணமடைந்த அவர் சனிக்கிழமையன்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார். இதன்மூலம் கொடிய வைரஸை வென்ற மிகப் பழமையான நோயாளி என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா தொற்றுநோயை வென்ற 100 வயதான சீன நோயாளி! Reviewed by Author on March 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.