அண்மைய செய்திகள்

recent
-

விருது பெற்ற பிரித்தானிய மருத்துவர் கொரோனாவுக்கு பலி: பிறருக்காக தன்னை தியாகம் செய்தவர் என உருகும் குடும்பம் -


புதனன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்த பிரபல மருத்துவரே கொரோனா பாதிப்பில் மரணமடையும் முதல் பிரித்தானிய மருத்துவர் என தெரியவந்துள்ளது.

எசெக்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனாவுக்கான சிகிச்சையில் இருந்து வந்துள்ளார் 76 வயதான மருத்துவர் Habib Zaidi.
தமக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதும், சுய தனிமைப்படுத்தலில் ஒரு வார காலமாக இருந்து வந்த மருத்துவர் ஹபீப்,
செவ்வாய் அன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி புதனன்று மரணமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவரும் ஹபீபின் மகளுமான சாரா, தமது தந்தை தொடர்பில் உருக்கமான தகவலை பகிர்ந்துள்ளார்.

வெறும் சாதாரண அறிகுறிகள் மட்டுமே தமது தந்தைக்கு கொரோனா தொடர்பில் தென்பட்டது எனவும், இந்த இக்கட்டான சூழலில் ஓய்வின்றி உழைத்த அவர், பிறருக்காக தமது உயிரை தியாகம் செய்துள்ளது பெருமையாக உள்ளது என்றார்.

Southend பகுதியில் மூன்று தலைமுறைகளாக, கடந்த 49 ஆண்டுகளாக மருத்துவ சேவையில் ஈடுபட்டுவரும் இந்த குடும்பம், சமுதாய மக்களுக்கு தொண்டாற்றி வந்துள்ளது என்கின்றனர் சக ஊழியர்கள்.
உள்ளூர் NHS அமைப்பால் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மருத்துவர் ஹபீப், தம்மை நாடிவருபவர்களுக்கு எப்போதும் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்துள்ளார்.

மருத்துவர் ஹபீபின் நான்கு பிள்ளைகளும் மருத்துவ துறையில் சேவையாற்றி வருகின்றனர். ஹபீபின் மனைவியும் ஒரு மருத்துவரே.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மரணமடையும் முதல் பிரித்தானிய மருத்துவர் ஹபீப் என கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 181 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மொத்த பலி நெண்ணிக்கை 759 எனவும், கொரோனா பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,543 எனவும் தெரியவந்துள்ளது.

விருது பெற்ற பிரித்தானிய மருத்துவர் கொரோனாவுக்கு பலி: பிறருக்காக தன்னை தியாகம் செய்தவர் என உருகும் குடும்பம் - Reviewed by Author on March 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.