அண்மைய செய்திகள்

recent
-

விரைவில் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும்! நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெளியிட்ட தகவல் -


கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி Michael Levitt அவர்கள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் 718,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 33,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையிலேயே, விஞ்ஞானி Michael Levitt இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் எனவும் கூறியுள்ளார்.


எவ்வாறாயினும், விஞ்ஞானி Michael Levitt கூறிய கருத்து தொடர்பில் பலரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
ஏனெனில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய போது, சீனா குறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்து போதிலும், Michael Levitt அவர்கள் துல்லியமான கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.
சீனாவில் 80,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 3,250 உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று Michael Levitt அவர்கள் மதிப்பிட்டு கூறியிருந்தார்.

அவரின் கூற்றின் படியே, சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸினால் சீனாவில் 3277 உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், 81,171 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், சீனாவில் கொரோனா வைரஸின் மையமாக இருந்த ஹூபே மாகாணம் நீண்ட நாட்களுக்குப் பின் தற்போது திறக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே, விஞ்ஞானி Michael Levitt வெளியிட்டிருக்கும் கருத்து தொடர்பில் பலரும் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விரைவில் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும்! நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெளியிட்ட தகவல் - Reviewed by Author on March 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.