அண்மைய செய்திகள்

recent
-

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் காலமானார்


திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.
திமுகவின் மூத்த தலைவரும், நீண்ட கால பொதுச்செயலாளருமான க.அன்பழகன் (97), கடந்த சில ஆண்டுகளாகவே வயது முதிர்வின் காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைபாடுகளை சந்தித்து வந்தார்.

மூச்சு திணறல் காரணமாக கடந்த மாதம் 24 ஆம் தேதி இரவு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அன்பழகனின் உடல் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் அஞ்சலிக்காக, சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை கட்சியில் தொடர்ந்து இருந்தவர் அன்பழகன். அவர் 43 ஆண்டுகளாக தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருந்து வந்தார். கருணாநிதி - அன்பழகன் இடையிலான நட்பு 75 ஆண்டுகள் ஆழமானது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் காலமானார் Reviewed by Author on March 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.