அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி நிதியமைச்சரின் முதல் பட்ஜெட் தாக்கல்! -


இந்திய வம்சாவளியினரான பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர் ரிஷி சுனக், தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.

தனது பட்ஜெட்டில் இடப்பட்டுள்ள திட்டங்கள் பிரித்தானியாவை கொரோனா வைரஸுக்கு எதிராக போராட தயார்ப்படுத்தும் என்று கூறினார் அவர்.
பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் முன் தனது குழுவினருடன் பிரதமர் இல்லம் முன் பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார் அவர்.

கொரோனாவின் தாக்கத்தால் ஒரு நிலையற்ற சூழல் நிலவும் நிலையிலும், அதை மேற்கொள்ளும் பொருளாதார கருவிகள் தங்களிடம் உள்ளது என்று கூறியுள்ளார் அவர். தனது பட்ஜெட் பொது சேவைகளுக்கான முதலீட்டை அளிக்கும் என்றும், கடுமையாக உழைக்கும் பல மில்லியன் உழைப்பாளர்களுக்கு வரிச் சலுகைகளையும் வழங்கும் என்றும் தெரிவித்தார் அவர்.
பிரித்தானியாவில் வாய்ப்புக்கள் சமமான அளவில் பரந்து கிடக்கும் பத்தாண்டு கால வளர்ச்சிக்கான அஸ்திபாரத்தை போடுவதில் தாமதம் எதுவும் இருக்காது என்றும் கூறினார் அவர்.
தனது வரலாற்றிலேயே பெரிய சவால்களை சந்திக்கும் அளவுக்கு அரசு மருத்துவத்துறைக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் கொடுப்பதாக தனது பட்ஜெட்டில் சுனக் உறுதியளிக்க இருக்கிறார்.
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி நிதியமைச்சரின் முதல் பட்ஜெட் தாக்கல்! - Reviewed by Author on March 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.