அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை முன்வைத்துள்ள பிரான்ஸ் -


ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதற்கு எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக பிரான்ஸ் தமது கடுமையான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சின் ஆசியாவிற்கான இயக்குனர் தியரி மத்து அண்மையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக இலங்கை முடிவு எடுத்துள்ளது.
அவர்கள் தீர்மானத்திலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளதால் அந்த தீர்மானம் மறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல. தீர்மானம் இன்னும் நிலுவையிலே உள்ளது.

இது சட்டபூர்வமானது. இலங்கை விடயத்தில் நல்லிணக்கம் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
2009 மே இல் முடிவடைந்த இலங்கை இனப்போரில் குறைந்தது 100,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்கொலை குண்டுதாரிகளென முத்திரை குத்தப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளுடன் இணைத்து 40,000 சிறுபான்மை தமிழர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியை அடைய இலங்கை நல்லிணக்கத்தைப் பெற வேண்டும் என்று நான் கூற முனைகிறேன்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த புதன்கிழமை 2015 ஆம் ஆண்டு தீர்மானத்திலிருந்து முறையாக விலகுவதாக இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தினர், விடுதலைப்புலிகளை தோற்கடித்தபோது இலங்கையின் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச தான் ஜனாதிபதியாக இருந்தார். இப்போது ஜனாதிபதியாக இருக்கும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்சதான் அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்தார்.
இதேவேளை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐ.நாவின் இந்த தீர்மானம் "இலங்கை மக்களின் இறையாண்மை மற்றும் கெளரவத்திற்கு ஒரு கறையாக உள்ளது" என்று ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக இலங்கை எடுத்துள்ள முடிவுக்கு எதிராக உலகின் பல நாடுகளும் இலங்கைக்கு எதிராக தமது கடுமையான நிலைப்பட்டை முவைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கைக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை முன்வைத்துள்ள பிரான்ஸ் - Reviewed by Author on March 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.