அண்மைய செய்திகள்

recent
-

உலகுக்கு முன்னுதாரணமாக கியூபா-இத்தாலிக்கு உதவ மருத்துவக் குழு!!

உலக மக்களின் உயிரை கொரோனா பறித்துக்கொண்டிருக்கிறது. சொந்த நாட்டு மக்களைக் கூட கொரோனா தாக்கியிருந்தால், அழைத்து வர உலக நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. ஆனால், கியூபா என்ற நாடு மட்டும் கொரோனா தாக்கிய மக்களைக் கருணையுடன் அணுகி, அரவணைத்துக்கொண்டுள்ளது. ஃபிடல் என்ற மாமனிதன் ஆட்சி செய்த தேசமான கியூபாவில் இதுவரை 4 பேரை மட்டுமே கொரோனா தொற்று தாக்கியுள்ளது.

இத்தாலியில் இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,825-யைக் கடந்துள்ளது. இந்தநிலையில், இத்தாலிக்கு உதவும் வகையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 52 பேர் அடங்கிய மருத்துவக் குழுவை கியூபா அரசு இத்தாலிக்கு அனுப்பியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த கியூபா மருத்துவக் குழுவை அனுப்புவது ஆறாவது நாடு இத்தாலியாகும். இதற்கு முன்னதாக, வெனிசுலா, நிகாராகுவா, ஜமைக்கா, சுரிநேம், கிரிநடா ஆகிய நாடுகளுக்கும் அனுப்பியுள்ளது.

முன்னதாக, 1,000 பேருடன் கரீபியன் பகுதியில் பயணித்து வந்த ப்ரீமர் சொகுசுக் கப்பலில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 40 பேருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் ப்ரீமர் சொகுசுக் கப்பலை தங்களது துறைமுகத்தில் நிறுத்த எந்தவொரு நாடும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் ஹவானா அருகேயுள்ள துறைமுகத்தில் ப்ரீமர் கப்பலை நிறுத்த க்யூபா முன்வந்தது.

கியூபாவிடத்தில் பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டதையடுத்து, மனிதநேயத்தின் அடிப்படையில், கியூபா இந்த உதவியைச் செய்துள்ளது. `கப்பலில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நலனைக் கருத்தில்கொண்டும் உலகுக்கு விடுக்கப்பட்டுள்ள பொதுவான சவலை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம் என்ற அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என கியூபாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கியூபாவில் இருந்து பயணிகளை விமானம் மூலம் லண்டனுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து தங்களது நாட்டின் சொகுசுக்கப்பலை துறைமுகத்தில் நிறுத்த அனுமதித்த கியூபாவுக்கு பிரிட்டன் நன்றி தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த பயணிகளும் கியூபாவுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

 


உலகுக்கு முன்னுதாரணமாக கியூபா-இத்தாலிக்கு உதவ மருத்துவக் குழு!! Reviewed by Author on March 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.