அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில்....கொரோனா தொற்று காலப்பகுதியில் பொதுமக்களுக்கு விசேட ஏற்பாடுகள்.....

நேற்றைய தினம் மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்  மற்றும் முப்படை அதிகாரிகள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கூட்டத்தின் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்  மன்னார் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் மக்கள் தங்களுடைய அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொள்ளும் முகமாக மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக பல்வேறு விதமான நடமாடும் சேவை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.

 குறிப்பாக மொத்த வியாபாரங்களில் ஈடுபடும் வர்தகர் ஊடாக கிராம ரீதியில் உள்ள சில்லரை வியாபார நிலையங்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள்  தங்கள் கிராமக்களில் இருந்தே ஊரடங்கு சட்டம் தளர்தப்படுகின்ற நேரங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 அதே நேரத்தில் நகரசபை மற்றும் பிரதேச சபைக்கு உட்பட்ட  பகுதிகளிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்திலும்  ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரத்திலும் மக்கள் வீடுகளில் இருந்தே தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் பொலிஸ் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக விசேட அனுமதி பெற்ற விநியோகஸ்தர்கள் மூலமாக பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

 குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மீன் மரக்கறி எரிவாயு நீர் முட்டை விநியோகம் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் மக்கள் வீடுகளில் இருந்தவாரே பெற்றுக்கொள்வதற்காக  சேவை வழங்குவதற்காக முன்வந்துள்ள விநியோகஸ்தர்களின் ஊடாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

நடமாடும் சேவையில் ஈடுபடும் விநியோகஸ்தர்கள் உங்கள் பகுதிகளுக்கே வருகை தந்து வாகன கோர்ன் சத்தம் எழுப்பி  உங்களுக்கு தேவையான பொருட்களை உரிய விலைக்கு விற்பனை செய்ய இருப்பதனால் குடும்பத்தில் இருந்து ஒரு நபர் மாத்திரம் வீட்டுக்கு வெளியில் சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது

ஊரடங்கு தளர்தப்படுகின்ற சமயத்தில் உள்ளூர் மற்றும் கிராம ரீதியாக இயங்குகின்ற வியாபார நிலையங்களில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளமையால் ஊரடங்கு சட்டம்  தளர்த்தப்படுகின்ற நேரத்தில் நகர்ப்பகுதிகளுக்கு வருகைதந்து கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என பொதுமக்கள்  வேண்டப்படுகின்றார்கள்

அதேநேரத்தில் நாளையதினம்  ஊரடங்கு சட்டத்தினை தளர்துகின்ற நேரத்தில் குழுக்களாக குடும்பங்களாக நகர்பகுதிகளுக்கு வருவதை தவிர்த்து வீடுகளிலிருந்து உங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தரையும் சமூகத்தையும் கோரோனா தொற்றில் இருந்து பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் மக்களின் பாதுகாப்புக்காக  பிரதேச செயலகத்தின்  ஊடாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் அணைத்து செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி நன்மையை பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மன்னாரில்....கொரோனா தொற்று காலப்பகுதியில் பொதுமக்களுக்கு விசேட ஏற்பாடுகள்..... Reviewed by Author on March 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.