அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்கள் ஒன்றுபடாவிட்டால் தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது- சட்டத்தரணி செ. டினேசன்

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த கடிதத்திலே சட்டத்தரணி டினேஸன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

ஏப்ரல் மாதம் நடைப்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலினை மையப்படுத்தி வன்னி தேர்தல் தொகுதியில் 18க்கு மேற்பட்ட சுயேட்சை குழுக்கள் உட்பட 27 கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதில் களமிறக்கப்பட்டுள்ள சுயேட்சை குழுக்கள் வன்னியில் தமிழர்களுடைய பிரதிநிதிதுவத்தினை குறைக்க வேண்டும்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே புலம் பெயர் அமைப்புகளினதும், சில நபர்களினதும், அரசாங்கத்தினதும் நிதியிலும் நிகழ்ச்சி நிரலிலும் பல குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியே சென்றவர்கள் கொள்கை ரீதியாக முரண்பட்டு பிளவுபட்டு வெளியேறியிருந்தால் ஒரே கட்சியாக உருவாகியிருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கு ஒரு கட்சியினை உருவாக்கி தங்கள் சுயலாப அரசியலை கொண்டு செல்வது தமிழர்களின் எதிர்கால இருப்புக்கு நல்லதல்ல.

இதுஇவ்வாறு இருக்க மன்னார் மாவட்டத்தில் மத ரீதியாக பிளவுபட்டு அரசியலில் ஈடுபடுதல் ஆரோக்கியமான விடயமல்ல. திருக்கேதீஸ்வர வளைவு தொடர்பாகவோ அல்லது மதங்களிடையே பிணக்கு இருந்தால் நிருவாக ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ தீர்த்துக்கொள்ள முடியும். தமிழ் தேசியத்தை கூறு போட்டு தமிழர்களின் வாக்குகளை சிதைத்துதான்
அதனை அடைய வேண்டும் என்று நினைத்தால் எம்மை வேறு இனத்தவர்கள் அடக்கி ஆள்வார்கள்.

மன்னார் ஆயர் அவர்களின் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிக்கை பலரின் அரசியல் கனவுகளை தவிடுபொடியாக்கியது. இவ்வேளை மன்னார் ஆயர் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு மத ரீதியாக அரசியலில் தடம் பதிக்க முடியாமல் போக சில மதக்குருக்களும் சில நபர்களும் முன்னால் போராளிகள் சிலரினை முன்னிலைப்படுத்தி தமது அரசியலை கொண்டு செல்ல முனைகின்றார்கள்.

ஆயர் இல்லத்தின் நிருவாகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத தலத்தில் அவ் அரசியல் கூட்டங்கள் சில பாதிரிமார் தலைமையில் நடைப்பெறுகின்றன. இது தொடர்பாக நாம் சிலர் மன்னார் ஆயரை நேராக ஆயர் இல்லத்தில் சந்தித்து தங்கள் நிலைப்பாட்டினை நீங்கள் அறிவித்த பின்னரும் சிலர் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்ற விடயத்தினை தெரியபடுத்தியிருந்தோம்.
அவ் வேளை தமிழர்களை பிளவுபடுத்தவோ அல்லது தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படவோ தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்ற வாக்குறுதியினை எமக்கு தந்திருந்தார்.

முன்னால் போராளிகள் போற்றதக்க வேண்டியவர்கள் அவர்களுக்கு கௌரவமளிக்க வேண்டியது எமது கடமை. புனர்வாழ்வு பெற்ற அனைத்து போராளிகளும் ஒரு அமைப்பாக ஒன்றாக வருகின்ற சந்தர்ப்பத்தில் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கலாம் . ஆனால் சிலர் சில நபர்களின் தூண்டுதலில் பேரில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வாக்கினை சிதறடிக்க அனுமதிக்க முடியாது.

வன்னி தேர்தல் தொகுதியில் அனைவரும் மத ரீதியாகவோ பணத்திற்காகவோ பதவிக்காகவோ சுயநலத்திற்காகவோ பிளவுபட்டு நிற்காது அனைவரும் இதய சுத்தியுடன் தமிழர்களின் கரங்களை பலப்படுத்த ஒன்றாக பயணிப்போம். இதுதான் காலத்தின் தேவை. இல்லாவிடின் தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. என குறித்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் ஒன்றுபடாவிட்டால் தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது- சட்டத்தரணி செ. டினேசன் Reviewed by Author on March 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.