அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டச்செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்-விசேட பாஸ் நடமுறை அமுல்படுத்தவது தொடர்பாகவும் ஆராய்வு.

மன்னாரில் மாவட்டத்தில் நடை முறை படுத்தப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்குச் சட்டத்தின் போது நடமாடுவதற்கு அனுமதி வழங்கப பட்டுள்ளவர்களுக்கு பாஸ் நடடைமுறையினை அமுல் படத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கு அமைவாக விசேட கலந்துரையாடல்  ஒன்று இன்று  சனிக்கிழமை  காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக்ததில் மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்றாஸ்  தலைமையில் இடம்பெற்றது.

-இதன் போது பல்வேறு தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக மன்னாரில் எதிர் வரும் 30ஆம் திகதியின் பின் கொரோனா ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்திலும் அவசரத் தேவைக்காக நடமாடுவதற்காக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் பாஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த பாஸ் நடை முறையானது அரச உத்தியோகத்தர்கள், பொது மக்களுக்கள் , வியாபாரிகள் , அரச உத்தியோகத்தர்கள் போன்றவர்கள்  காவல்துரை ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்திலும்  நடமாடுவதற்காகவே வழங்கப்ப உள்ளது.

 இதே நேரம் மீனவர்களுக்கு  மீன்பிடி திணைக்களத்தின் உதவி பணிப்பாளரின் சிபாரிசிலும்   விவசாயிகளுக்கு விவசாயத் தினைக்ககளத்தின்  பிரதி பணிப்பாளரின்  சிபாரிசிற்கு அமைவாகவும் பொலிஸ் பாஸ் வழங்கப்பட உள்ளது .

இந்த பாஸ் அனுமதிகள் அனைத்தும்  பிரதேச செயலாளர்களின் சிபாரிசுகளுடன் அந்தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால்  வழங்கப்பட உள்ளது என கலந்துரையாடலில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டத
 மேலும் மன்னார் மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டத்தில் இருந்தும் பொருட்கள் கொண்டு செல்வதற்கான விதி முறைகள் நடைமுறைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. வெளி மாவட்டத்தில் இருந்து கொண்டு வருகின்றவர்கள் அவர்களே கிராம பகுதிகளுக்கு சென்று வியாபாரத்தை மேற்கொள்ளாமல் மொத்த வியாபாரிகளிடம் கொடுத்து செல்வதும் அவ்வாறே இந்த மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்களும் அந்த நடை முறைக்கு செயல்பட தீர்மானிக்கப்பட்டு நடை முறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது பொலிஸ் உயர் அதிகாரிகள் உற்பட அழைக்கப்பட்ட திணைக்களங்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.



மன்னார் மாவட்டச்செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்-விசேட பாஸ் நடமுறை அமுல்படுத்தவது தொடர்பாகவும் ஆராய்வு. Reviewed by Author on March 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.