அண்மைய செய்திகள்

recent
-

`பிடித்த வேலையைச் செய்யும் சந்தோஷம் எதிலும் கிடைக்காது!’ - அசத்தும் `சாக்ஸபோன்’ ஏஞ்சல் மோனிகா


திருச்சி, காஜாப்பேட்டை பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தோமினிக். இவரின் மகள் ஏஞ்சல் மோனிகா. சாக்ஸபோன் இசைக்கலைஞரான இவர், திருவிழா மற்றும் விசேஷ வீடுகளில் இசைக்கருவியை வாசித்து அசத்தி வருகிறார். பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், கடந்த சில வருடங்களாக ``ஏஞ்சல் பேண்ட்" எனும் பெயரில் இன்னிசைக் குழு நடத்தி வருகிறார்.

 ஏஞ்சல் மோனிகாவை நேரில் சந்தித்தோம். ``என் அப்பா தோமினிக், ஓர் இசைக்கலைஞர். அம்மா ஜெனிட்டா குடும்பத் தலைவி. 30 வருடங்களாக அப்பா இசைக்கலைஞர் என்றாலும் குடும்பம் கஷ்டத்திலேயே நகர்ந்தது. குடும்ப வறுமையின் காரணமாக பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. குடும்பச் சூழல் காரணமாக வேலைக்காக மாலத்தீவு சென்றேன்.

.``இசை இருக்கும்... இடையில் கொஞ்சம் அரசியலும் இருக்கும்!'' - நாடக மேடையேறும் `வொண்டர்லேண்ட்' அலெக்ஸ் அங்கு, நல்ல வேலை கைநிறைய சம்பளம் என வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. இடையில், திருமணம் நடைபெற்றது. அதைத் தொடந்து குழந்தை என சந்தோஷமாக இருந்த இல்லற வாழ்க்கையில் அதிர்ச்சி காத்திருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரியும் சூழல். அவரைப் பிரிந்து வந்தேன். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தபோதுதான், எனக்கு சாக்ஸபோன் வாசிக்க ஆர்வம் வந்தது.

எனது விருப்பத்தை அப்பாவிடம் தெரிவித்தேன். அவர் ஓர் இசைக்கலைஞர் என்றாலும், பெண்ணாக நான், ஆண்கள் வாசிக்கவே சிரமப்படும் சாக்ஸபோன் வாசிப்பது சிரமம் என்றும், பாதுகாப்புக் கருதி என் விருப்பத்தை மாற்றிக்கொள்ளச் சொல்லி சத்தம் போட்டார். ஆனாலும், விடாப்பிடியாக இருந்தேன். இறுதியில் எனது விருப்பத்துக்குத் தடை சொல்ல அரைமனதோடு அப்பாவும், அம்மாவும் சம்மதம் தந்தனர்.

தொடர்ந்து, மெல்ல மெல்ல இசையார்வம் கொண்ட நபர்களைத் தேடிக் கண்டுபிடித்தேன். அந்தவகையில் இணைந்த நபர்களைச் சேர்த்து, இன்னிசைக் குழு ஆரம்பித்தோம். தற்போது ஏஞ்சல் பேண்ட் இன்னிசைக் குழு எனும் பெயரில் செயல்பட்டு வருகிறோம்.

சாக்ஸபோன் என்பது ஆண்கள் வாசிப்பதற்கு மிகவும் சிரமமான கருவி. ஆனாலும், எனக்குப் பிடித்த இசைக் கருவியை வாசிக்கிறோம் என்ற சந்தோஷத்தில் தொடர்ந்து இதில் ஈடுபட்டு வருகிறேன். இப்போது பலரும் என்னையும், எனது இன்னிசைக் குழுவையும் அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளார்கள். தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் இன்னிசை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறோம்.

ஒரு பெண்ணாக இன்னிசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது பார்வையாளர்கள் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் பார்ப்பார்கள். அதைத் தாண்டியும் கொண்ட கொள்கையையும், பக்குவமும் என்னைத் தாங்கிப் பிடிக்கிறது.

எல்லாத்தையும்விட என்னோடு இருக்கும் இன்னிசைக் கலைஞர்கள் எனக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். வெறும் பத்தாவது படித்த நான், 15 பேருக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். அதைவிட பிடித்த வேலையை செய்கிறோம் என்கிற மனநிறைவு வேறு எதிலும் இல்லை" என்றபடி சாக்ஸபோன் வாசிக்க ஆரம்பித்தார்.


`பிடித்த வேலையைச் செய்யும் சந்தோஷம் எதிலும் கிடைக்காது!’ - அசத்தும் `சாக்ஸபோன்’ ஏஞ்சல் மோனிகா Reviewed by Author on March 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.