அண்மைய செய்திகள்

recent
-

மருதமுனை Riders` Hub சைக்கிள் பயிற்சியாளர்களின் பொதுக்கூட்டமும் மேலங்கி கையளிப்பு நிகழ்வும்


மருதமுனை Riders` Hub சைக்கிள் பயிற்சியாளர்களின் பொதுக்கூட்டமும் மேலங்கி கையளிப்பு நிகழ்வும் மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று (29-02-2020) நடைபெற்றது.

மேற்படி நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக, இக்கழக உறுப்பினர் றிஸ்வர் அப்துல் சத்தார் அவர்களினால் வரவேற்புர நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து சைக்கிளிங் எனும் உடற்பயிற்சியின் நன்மை தீமைகள், உடற்பயிற்சியின் கட்டாயத்தன்மை, Cyclist ஒருவருக்கு இருக்க வேண்டிய பண்புகள், கடைப்பிடிக்க வேண்டிய தன்மைகள் சம்பந்தமாக கழக உறுப்பினர் கலீல் கபூர் அவர்கள் ஒரு பல்லூடக விளக்கக்காட்சி (Multimedia Presentation) ஒன்றினையும் செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து Ease Oil நிறுவனத்தினால் Riders` Hub க்கான மேலங்கி அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. Ease Oil நிறுவனத்தின்  உத்தியோகத்தர் சுஹைர் அபதுல் லத்தீப் அவர்கள் மேலங்கிகளை கழக உறுப்பினர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளித்து வைத்தார்.

இதனை தொடர்த்து இரப்போசன நிகழ்வுடன் நன்றி நவிலலும் ஏற்புரையும் Riders` Hub உறுப்பினர் மருதமுனை மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் ARM. அஸ்மி அவர்களினால் வழங்கப்பட்டதுடன் பொதுக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

காமிஸ் கலீஸ் / மின்ஹாஜ்மருதமுனை Riders` Hub சைக்கிள் பயிற்சியாளர்களின் பொதுக்கூட்டமும் மேலங்கி கையளிப்பு நிகழ்வும் Reviewed by Author on March 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.