Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

800 மில்லியன் ரூபாவில் புதுப்பொலிவு பெறும் திருக்கேதீச்சரம்- 10-06-2020ம் திகதி கும்பாபிஷேகம்--ஆலய திருப்பணிச்சபை முடிவு-படங்கள்


சிவபூமியாம்  மன்னார் மண்ணில் வீற்றிருக்கும் சிவபெருமான் திருத்தலமான திருக்கேதீச்சரம் மன்னார் மாந்தை எனும் இடத்தில் மாதோட்ட நகரில் அமைந்துள்ளது.

கேது வழிபட்டமையால் “கேதீஸ்வரம்” எனப் பெயர் பெற்றது என்கிறது தலவரலாறு. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்,சுந்தர மூர்த்தி நாயனார் 7ம் நூற்றாண்டிலேயே ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம் திருக்கேதீஸ்வரம்.

 • சிவபக்தனான இராவணனை கொன்ற பாவத்தை தீர்ப்பதற்காக இராமன் இங்கு வழிபட்டதாகவும் வராலாறு கூறுகிறது.

கடந்த காலங்களில் புயலாலும், போர்த்துக்கீசராலும் அழிவடைந்த இந்த திருத்தலத்தை புனர் நிர்மாணம் செய்ய சைவம் வளர்த்த “ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலரால்” கூட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது..

கோவில் தற்போது புதியதொரு கும்பாபிஷேகத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
உள்நாட்டு போரால் திருக்கேதீஸ்வர கிராம மக்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்திருந்தாலும் தற்போது மீண்டும் இந்த கிராமம் மீள உருவாகிவருகிறது.

பல மடங்களும்,கட்டடங்களும் இல்லங்களும் கோவிலை சுற்றிவர வேரூன்ற ஆரம்பித்திருக்கிறது. அதன் உச்சக்கட்டமாக கோவிலும் கடந்த சில வருடங்களாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த திருத்தலம் கடந்த காலங்களில் பலமுறை திருத்தப்பட்டு பல கும்பாபிஷேகங்களை கடந்திருந்தாலும் இந்தமுறை கருங்கற்களால் முழுவதும் வடிவமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது.

கருங்கற் தூண்களாலும் மிகவும் நுண்ணியமாக வடிவமைக்கப்பட்ட கருங்கற் சிலைகளாலும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
 • தேவசபை மண்டபம்
 • சிவன். விமானம்
 • அம்மன் விமானம்
 • மகா மண்டபம்
 • 63-நாயன்மார்கள்
 • வசந்த மண்டபம்
 • பிரதான மண்டபம்
 • கருவறை(சிவன்.அம்மன்)
 • உட்பிரகாங்கள் சுற்றுப்பிரகாரங்கள்
 • நாவலர் சன்னிதானம்
 • முருகன் சன்னிதானம்
 •  பிள்ளையர் சன்னிதானம்
 • கேது சன்னிதானம்
 • அத்துடன் 24 சன்னிதிகள்
மூன்று பக்கமும் முதலே கோபுரம் இருந்தது இம்முறை விசேட விதமாக  வடக்கு வாசல் கோபுரமும் மேல்தலம்முழுவதும்கருங்கற்களினால் காட்ச்சி தர இருக்கின்றது.
ஆலய வளாகத்தினை தூய்மையாக்குதலும் வர்ணம் பூசுதலும் இன்னும் தேர் முட்டி முகப்புக்கள் கும்பாபிஷேகசெலவுகள் சில வேலைகளும் உள்ளது.25 மில்லியன் ரூபாவும் செலவாகும்

ஒவ்வொரு கடவுளின் சந்நதிகளும் மீள புதுப் பொலிவு பெற்று வருகிறது.
ஒவ்வொரு சிலைகளும் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் நேர்த்தியாக கருங்கற்களால் வடிவமைக்கப்பட்ட சிலைகளும்
கருங்கற் தூண்களும் கண்கொள்ளாக் காட்சியாக காட்சியளிக்கிறது. கருங்கற்தூண்களில் செதுக்ப்பட்டுள்ள சிலைகளும்,வடிவங்களும் ஆகும்.

கடந்த பல வருடங்களாக பார்த்து வந்த கோவில் இன்று புதியதொரு வடிவம் பெற்று கம்பீரமாக காட்சியளிப்பது மனதுக்கு மிகுந்த சந்தோஷத்தையும் மனநிம்மதியையும் தரும்

திருக்கேதீஸ்வரத்தானின் அமைப்பும், நுட்பமான கருங்கற்தூண்
கருங்கற்சிலை வேலைப்பாடுகளும், மரவேலைகளும் சைவசமயத்தவராகிய ஒவ்வொருவரும் புனர்நிர்மாணத்துக்கு கட்டாயம் உதவ வேண்டும் என்ற எண்ணத்தை எமக்குள்ளே தூண்டுகிறது.

புதுப்பொலிவு பெற கருங்கற் தூண்களால் நிமிர்ந்து நிற்கும் இந்த பாடல் பெற்ற திருத்தலத்தின் புனர் நிர்மாணத்துக்கு ஒவ்வொருவரும் நிதி உதவி செய்வோம்.

சிவனை முழுமுதற் கடவுளாக வழிபடும் சைவசமயத்தை அடுத்த தலைமுறைக்கு முறையாக கையளிக்க நாமும் எம்மாலான நிதி உதவியை வாரி வழங்குவோம். எமது நாட்டுக்கே பெருமையாக விளங்கும நாயனார்களால் பாடல் பெற்ற இந்த திருத்தலத்தை ஈழத்தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்

இந்திய அரசினால் எமது ஆலயத்திற்கு வழங்கப்பட்டநிதியானது 325 மில்லியன் ரூபாயும் மிகவும் அழகிய சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த கருங்கற்தூண்களுமாகும் வேலை நிறைவுபெற்றுள்ளது. மேலதிகமாக இன்னும் 450 மில்லியன் நிதியானது தேவைப்ப்டுகின்றது.

கிட்டதட்ட மொத்தமாக 800 மில்லியன் ரூபா நிதியானது  தேவையானது
450 மில்லியன் நிதியானது தேவைப்படுகின்றது  எமது  ஆலய பரிபாலன திருப்பணிச்சபையும் அங்கத்துவ உறுப்பினர்களும் தங்களது பங்களிப்பினைவழங்கி வருவதோடு புலம்பெயர் தேசங்களில் வாழுகின்ற எமது உறவுகளும் சிவபக்த அடியார்களும் தங்களின் முழுமையான பங்களிப்பினை வழங்குததாகவும் ஒவ்வொரு பகுதியையும் பொறுப்பெடுத்து உள்ளனர்.

இந்த நல்லுங்களின் பங்களிப்புடனும் ஒத்துழைப்புடனும் துரிதமாக நடைபெற்றுவருகின்ற ஆலய கட்டுமானப்பணியானது தேர்ச்சிபெற்ற இந்திய சிற்பாச்சாரியார்களினால் சிற்பவேலைப்பாடுடன் நடைபெற்று வருகின்றது.

அதிக சிரத்தையுடன் கவனமாக நீண்டகால நோக்குடன் திருப்பணிச்சபை வேலைகளை செய்துவருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்த வருடம் 10-06-2020 ம் திகதி கும்பாபிஷேகம் நடாத்துவதற்கு திருப்பணிச்சபை முடிவு செய்துள்ளது.

தற்போதைய காலசூழல் காரணமாகா ஆலய பணிகள்மெதுவாகத்தான் நடைபெறுகின்றது. இவ் வருடம் நான்காம்மாத இறுதிப்பகுதிக்குள்முழுமையாக வேலைத்திட்டங்கள்நிறைவு பெற்றதும்  திட்டமிட்டபடி புதன் கிழமை 10-06-2020 இனிய நாளில் மஹா கும்பாபிஷேகம் சிவபெருமான் திருவுளப்படி நடைபெறும் என்பது திண்ணம்.

 குறிப்பு.......................................

இன்னும் திருக்கேதீச்சரத்தில்  செய்யப்படவேண்டிய பாரிய வேலைத்திட்டம் ஒன்று உள்ளது அதுதான் இராஜ கோபுரம்  ஒன்று கட்டாயம்கட்டப்பட வேண்டும் அதற்கான பெரும்முயற்சியும் எடுக்கவுள்ளோம் அதற்கான  நிதியானது சுமார் 900 மில்லியன் ரூபா செலவாகும் என கணக்கிட்டுள்ளோம் அதையும்  செய்துமுடிப்பதற்கான பணிகளை இப்பணி முடிந்ததும் தொடங்கும் நாம் இல்லாவிடினும் எமது இளம்தலைமுறை செய்யும்  இன்னும் 1000 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நின்று வரலாறு பேசும்.

தகவல்-

கிரியாத்துவநிதி,பிரம்ம ஸ்ரீ தி.கருணானந்தக்குருக்கள்
பிரதம குரு
திருக்கேதீச்சரம்

சி.இராமகிருஷ்ணன்
இணைசெயலாளர்
திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச்சபை

 3000 ஆண்டுகள் பழமையான வரலாறு இருந்தாலும்
1000 ஆண்டுகள் பழமையான வரலாறு ஆவணங்கள் உள்ளது ஆனால்
400 ஆணடுகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம் வருடத்திற்கு மேல் பழமையானதும் புதுமையானதும் முழுமையாக கருங்கல்லினால்  கட்டி கும்பாபிஷேகம் காண இருக்கின்ற மன்னாரின் பெருமை  திருக்கேதீச்சரம்.

தொகுப்பு-வை.கஜேந்திரன்,BA


800 மில்லியன் ரூபாவில் புதுப்பொலிவு பெறும் திருக்கேதீச்சரம்- 10-06-2020ம் திகதி கும்பாபிஷேகம்--ஆலய திருப்பணிச்சபை முடிவு-படங்கள் Reviewed by Author on March 28, 2020 Rating: 5

1 comment:

vaisnavy said...

கும்பாபிசேகம் தமிழில் நடத்துங்கள்.. தஞ்சை பெரிய கோயில் சித்தர் மடாதிபதிகள் தொடர்பு கொள்ளுங்கள் ; அண்மைய தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழில் செய்தவர்கள் ஆவர் .

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.