அண்மைய செய்திகள்

recent
-

சுவிஸ் மக்கள் கடந்த 30 நாட்களாக இணையத்தில் அதிகமான தேடியது என்ன?


ArgYou எனும் வணிக ஆய்வு நிறுவனம் கடந்த 30 நாட்களாக வீடுகளில் முடங்கி இருக்கும் சுவிஸ் மக்கள் இணையத்தில் எத்தகைய சொற்களை அதிகம் தேடுகிறார்கள் என கண்டறிந்து வெளியிட்டுள்ளது.
சுவிசில் சுக் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் ஆய்வில் 600,000 சுவிஸ் வாழ் மக்கள் லண்டன் நகரிற்கும், 400,000 மக்கள் பரிஸ் நகரத்திற்கும், கிட்டத்தட்ட 200,000 மக்கள் பெர்லீன் நகருக்கும் பயணம் செய்ய வாய்ப்புத் தேடி இருக்கின்றார்களாம்.

அதுபோல் உடற்பயிற்சி நிலையம், அழகு நிலையம், முடிதிருத்து நிலையம், உருவிநிலையம் (மசாஜ்), விடுமுறை, மகப்பேறு, உடல்நலம் மற்றும் திருமணம் ஆகிய தேடல்களை இணையத்தில் அதிகம் தேடியிருக்கிறார்கள் சுவிஸ் மக்கள்.
கூகிள் தேடல், மற்றும் சமூகத் தளங்களில் சுவிஸ் வாழ் மக்கள் தேடும் சொற்களை இந்த நிறுவனம் தமது ஆய்விற்கு உட்படுத்தி இத்தகவலை வெளியிட்டுள்ளது.
190 இணைய நிறுவனங்களில் தேடப்பட்ட சொற்களின் அளவைக்கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக இந் நிறுவனத்தின் தலைவர் கிறஸ்தோப் கிளவுசெர் பொது ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.


08. 06. 2020 விரும்தோம்பல் துறைக்கு கட்டுப்பாடுகள் தளர்த்த வாய்ப்பு?
சுவிசில் 28. 04. 2020 முதல் கொரோனா பேரிடர் நடவடிக்கைகள் சில முதற்கட்டமாகத் தளர்த்தப்பட்டாலும் எப்போது முழுமையான இயல்பும், வழமையும் திரும்பும் எனக் கணிக்க முடியாது உள்ளது.
கடந்த நாட்களில் சுவிசின் சுகாதர அமைச்சர் கிறபுண்டென் எனும் மாநிலத்தின் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையினைப் பார்வையிடச் சென்றிருந்தார்.

அப்போது அவரை அங்கு செவ்வி கண்ட ஊடகங்கள் முழுமையான இயல்பு எப்போது திரும்பும் என்ற கேள்வியினை தொடுத்தனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர்,
இப்போது முழுமையான பதில் அளிக்க முடியாது என்று மறுத்திருந்தார்.
ஆனாலும் தொடர்ந்தும் இப்போதுபோல் நிலமை சீராக இருந்தால் 08. 06. 2020 விரும்தோம்பல் துறைக்கு விடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்த வாய்ப்பு உள்ளதாக சூசகமாகப் பதில் அளித்தார்.
மேலும் அவர் தனது செவ்வியில் இப்போது உடனடியாகப் பயணக்கட்டுப்பாடுகளை சுவிஸ் மட்டும் விலக்கி எப் பயனும் இல்லை, சூழ உள்ள நாடுகளில் சுதந்திரமாக பயணிக்க தடையிருக்கும் சூழல் நீங்கும் வரை நாமும் ஒன்றுகூடலைத் தவிர்ப்பதே சிறந்தது எனவும் சுட்டிக்காட்டினார்.
விடுமுறை காலத்தை சுவிசின் ஒவ்வொரு மாநிலமும் தமது சுயாட்சி இறமைக்கு அமைய விரும்பிய படி ஒழுகி வருகின்றது. சுவிசில் கோடை விடுமுறை பெரும்பாலும் 7ம் மற்றும் 8ம் மாதத்திற்குள் அமைவதாகவே உள்ளது.
இக்காலத்தில் தமிழர்கள் தாயகத்திற்கு விடுமுறைக்கு செல்லும் காலமாக இருக்கும். 7ம், 8ம் மாதங்களில் விமானச் சீட்டின் விலை இரட்டிப்பதும் வழமை.

ஆனால் 2020ம் ஆண்டு வசந்தகால மற்றும் கோடை விடுமுறையை கொரோனா தன் விருப்பப்படி ஆட்டுவிக்கின்றது.
எப்படியும் இவ்வாண்டு ஐரோப்பா முழுவதும் பயணத்திற்கு பெரும் கட்டுப்பாடு நிலவலாம் என அஞ்சுவதால் சுவிஸ் நாட்டவர்கள் ஆசியாவிற்கு அல்லது வேறு தூர தேசங்களுக்கு விடுமுறைக்கு செல்ல வாய்ப்புள்ளதா என இணையத்தை கடந்த நாட்களில் அதிகம் நாடுகின்றனர் என ArgYou ஆய்வு சொல்கின்றது.
சுவிஸ் மக்கள் தொடரூந்தில் அதிகம் விரும்பி செல்லும் நகரங்கள் பிரான்சில் பரிஸ், ஒஸ்திரியாவில் வீயென்னா, இத்தாலியில் மைலாந்து மற்றும் ஜேர்மனியின் பெருநகரங்கள் கேளின், பெர்லீன் ஆகும்.
ஆனால் இப்போது ஐரோப்பாவின் பெருநகரங்களுக்கு மின்னுந்தில் சென்றுவர இதுவரை இருந்த வாய்ப்புக்கள் இப்போது இல்லை. இயல்பு நிலையில் ஐரோப்பியப் பெருநகர்களுக்கு பொதுப்போக்குவரத்து எப்போது வழமைக்கு திரும்பும் என இப்போது சொல்லமுடியாது.
விமானங்களும் நிறுத்தப்பட்டு அல்லது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆக இவ்வாண்டு நீச்சல் விடுமுறை, ஐரோப்பிய நகரைச் சுற்றிப்பார்க்கும் வகையிலான விடுமுறையினை இந்த ஆண்டு சுவிஸ் நாட்டவர்கள் பெரும்பாலும் தவிர்ப்பார்கள் என மேலான ஆய்வு எடுத்துக் காட்டுகின்றது என்கிறார் கிளவுசெர்.
சுவிஸ் விமான சேவை
நீண்டஇடைவெளி எடுத்துக்கொண்ட சுவிஸ் விமான சேவை 17. 05. 2020 முதல் ஐரோப்பிய நகர்களுக்குள் இலணடன், அம்ஸ்ரர்டாம், பெர்லீன், கம்பூர்க், லிசாபொன், ஸ்ரொக்கொல்ம், போர்ற்ரோ, அத்தேன் ஆகிய நகரங்களுக்கு பறக்க உள்ளது.
ஐரோப்பா தவிர்து சுவிஸ் நேரடியாக நியூயோர்க் பறப்பினையும் மேற்கொள்ள உள்ளதாம். சுவிட்ஸர்லாந்தின் விமானப் பறப்புக்கள் பொருளாதார நோக்குக் கொண்டதாக அமையும்.
17. 05. 2020 முதல் விமானங்கள் பறந்தாலும் அவை வழமையான கோடை கால அட்டவணைக்கு அமையப் பறக்காது என்றார் சுவிஸ் விமான சேவைப் பேச்சாளர் மைக் பூல்றொத்.
வெளிவிவகார அமைச்சு
சுவிட்ஸர்லாந்து அரசின் வெளிவிவகார அமைச்சு தமது இணையத்தில் சுவிஸ் வாழ் மக்களை எப்பயணமும் அவசியமின்றி மேற்கொள்ள வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
“சுவிற்சர்லாந்தின் நடுவன் அரசு 13. 03. 2020 முதல் மறு அறிவித்தல் வரும் வரை கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக அத்தியாவசிசயத் தேவையின்றி எவரையும் வெளியில் பயணம் செய்ய வேண்டாம் என வேண்டுகின்றோம்.
பயணக் கட்டுப்பாடு எக்காலம் வரை இருக்கும் என இப்போது எதிர்கூறமுடியாது!"
“Heute besteht in allen Regionen der Welt das Risiko einer Ansteckung mit dem neuen Coronavirus. Der Bundesrat rät deshalb seit dem 13. März 2020, bis auf weiteres auf nicht dringliche Auslandreisen zu verzichten”
2020ல் பயணம் குறைந்தால் சுற்றுச்சூழலிற்கும் உங்கள் கையிருப்பிற்கும் அது பாதுகாப்பே!
சுவிஸ் மக்கள் கடந்த 30 நாட்களாக இணையத்தில் அதிகமான தேடியது என்ன? Reviewed by Author on April 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.