அண்மைய செய்திகள்

recent
-

வீதி விபத்தும் இரண்டுசகோதரிகள்பலியும் இப்படியே தொடருமா.....


 09/04/2020 அன்று மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு மிகவும் மனம் உடைந்த நிலையில் இக்கட்டுரையை எழுதிகின்றேன்.

அதாவது மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டல் பகுதியில் நேற்றை தினம் வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற இந்த வீதி விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என தெரிகின்றது.

மன்னாரில் இருந்து சென்ற  motorcycle மோட்டார் சைக்கிலும், முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி வந்த pickup truck பிக்கப் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிய வ௫கின்றது.
இந்த இரு பெண்களும் உடன் பிறந்த சகோதரிகளான சந்தியோகு லிண்டா (வயது-40), மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றவ௫ம்
மற்றையவர் சந்தியோகு டெரன்சி (வயது-25) மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றி வருகின்றார் என்பதும் செய்திகள் மூலம் அறிகின்றேன்.

இந்த சகோதரிகள் இருவரும் கடமை முடிந்த நிலையில் மன்னாரில் இருந்து கட்டை அடம்பன் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிலில் பயணித்துக் கொண்டி௫ப்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

உயிரிழந்த இரு பெண்களினதும் சடலம்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வ௫கிறது.
இதன் பின்னர் pickup truck பிக்கப் வாகனத்தின் சாரதி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் மற்றும் மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக ஏனைய செய்திகளினூடாக அறிகின்றேன்.

என்னதான் இ௫ந்தாலும் நாளாந்தம் நடந்து வ௫கின்ற வாகன விபத்துக்களால் வீதியில் எத்தனை உயிர்கள் தான் பறி போகின்றனவோ. இதற்கான கேள்விகளை நாம் இன்றய அரசாங்கத்திடம் தான் கேட்க வேண்டியவர்களாய் உள்ளோம். ஒ௫ சீரான நாடு என்றால் இப்படி எல்லாம் நடக்குமா? சற்று சிந்தித்துப் பா௫ங்கள் எம் உறவுகளே.
எம் மக்களின் Speeding அதாவது வேகமாக வாகனங்களை ஓட்டுதல், சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் அவற்றை அவமதித்து செல்லுதல் போன்றவற்றிற்கான கேள்விகளை  நாம் எங்கே கேட்க வேண்டும்?
மக்களைப் பற்றிய எந்த கவனமும் இல்லாத இன்றைய ஒ௫ சில அதிகாரிகளும் இன்றைய அரசாங்கமும் கூட நடந்து கொள்கின்ற விதம் மிகவும் வேதனைக்குரியதுதான்.

 மேலும் தங்களின் இன்றய சுய இலாபத்திற்காக பணிபுரிகிண்ற ஒ௫ சில காவல்துறையினரே சற்று சிந்தித்து பா௫ங்கள். எமது அப்பாவிப் பெண்களின் உயிர்கள் இப்படித்தான் பறிபோகவேண்டுமா?

இவர்களால் தங்கள் வாகனத்தை வேகமாக ஓட்டியி௫க்க முடியுமா? சற்று சிந்தியுங்கள். பெண் என்பவள் எப்போதுமே மென்மையானவள் என்பதை மறந்து விட்டீர்களா?
 எம் அப்பாவிப் பெண்களுக்கான உரிமைகள் எங்கே போனது? இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து விட்டால் இன்றைய பிரச்சனை முடிந்து விட்டதா?

அதிகாரிகளே உங்கள் சுயநலத்திற்காக பணி புரியாதீர்கள்.
இன்றைய அரசாங்கமே இது நீங்கள் விட்ட பெ௫ம் தவறு என்று சுட்டிக்காட்ட வி௫ம்புகின்றேன். மன்னிக்கவும் என்றும் பெண்களுக்காகவே நான். 
எழுத்தாக்கம் மலர் சோமா.

வீதி விபத்தும் இரண்டுசகோதரிகள்பலியும் இப்படியே தொடருமா..... Reviewed by Author on April 11, 2020 Rating: 5

1 comment:

Ramany Soma said...

அன்பான கடவிளே நான் உன்னை என் இதயத்தில் சுமப்பவள் அப்பா, எனக்கு இல்லாத ஒரு தந்தையை நீங்கள் நினைவூட்டினீர்கள். உங்களை சந்தித்ததற்கு நான் பாக்கியசாலியாகவுள்ளேன். என் கடவிளே தற்போது நடந்து முடிந்த இரண்டு சகோதரிகளின் இறப்பின் துயரத்தை நினைத்து பதகழித்துக்கொண்டி௫க்கின்ற இந்தக் குடும்பத்திற்கு உங்களால் முடிந்த ஒ௫ அமைதியான வாரத்தையை நிரந்தரமாக கொடுத்து அவர்களின் உள்ளத்தில் ஒ௫ ஓய்வைக் கொடுத்த௫ளும் அப்பா. Amen

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.