அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா எதிரொலி: ஆஸ்திரேலிய கூட்டாட்சி முறையில் மாநிலங்கள் எல்லைகளை மூட முடியுமா?

ஆஸ்திரேலியாவில் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை வெறும் சிறு அடையாளம் மூலமே கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருக்கும். தூசி நிறைந்த எல்லைப்புற சாலையில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநில எல்லைக்குள் நுழைகிறோம் என்பதை கூட அறிந்திருக்க முடியாத அளவிலேயே சூழல் இருந்திருக்கின்றது.

ஆனால் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல், இதை அத்தனையையும் மாற்றி இருக்கிறது. இந்த சூழல், மாநிலங்கள் இடையே எல்லைகள் அமைத்து வேலி அமைக்கும் நிலைக்கு மாநில அரசுகளை தள்ளியிருக்கிறது.

இவ்வாறு தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா,  குயின்ஸ்லாந்த் உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் எல்லைகளை மூடியிருக்கின்றன. இது முன்னெப்போதும் யோசித்துக்கூட பார்க்க இயலாத முடிவாகும்.

இந்த நிலையில், மாநில எல்லையை கடக்க எண்ணும் பயணிகள், 14 நாட்கள் சுய-தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். தீவு மாநிலமான தாஸ்மானியாவும் இவ்வாறான கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

குயின்லாந்த் எல்லையை மூடுவதாக அறிவித்திருந்த அம்மாநில முதல்வர் அன்னஸ்டாசியா பாலாஸ்ஸ்குக், சரக்கு மற்றும் அத்தியாவசிய பயணத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படும் எனக் கூறியுள்ளார். இச்சூழலில் தனிமைப்படுத்தலை மீறுபவர்கள் மீது 13,345 ஆஸ்திரேலிய டாலர்களை வரை அபராதம் விதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

1919-ல் பரவிய ஸ்பானிஷ் காய்ச்சலுக்கு பின்னர் ஆஸ்திரேலியாவில் இதுபோன்றதொரு எல்லைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதில்லை.

ஒரு பக்கம் கொரோனாவுக்கான கட்டுப்பாடு என்றாலும் எல்லை மூடல் பல சிக்கல்களையும் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. உதாரணத்திற்கு, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கும் ஒருவர் குயின்ஸ்லாந்த் மாநிலத்தில் பணியாற்றுகிறார் என்றால் அவர் பணியாற்றும் மாநிலத்தில் நுழைய சிறப்பு அனுமதியை பெற்றிட வேண்டும்.

இச்சூழலில், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற பல வெளிநாட்டினர்கள் உள்புற பகுதிகளில் சிக்கயுள்ளதாக சொல்லப்படுகின்றது. ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற 75,000 பேர் பூங்காக்கள் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 அதே சமயம் தற்போதைய நிலை, இதுபோன்று மாநிலங்கள் இடையேயான எல்லைகளை கட்டுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசியலமைப்பு சட்டத்தில்  மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வியினையும் எழுப்பியிருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரசியலமைப்பு சட்ட வல்லுநரான பேராசிரியர் ஏனி டவோமி, வர்த்தகம் தடைப்பட்டாலும் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்கிறார்.

 “மக்கள் எல்லைகளை கடப்பதற்கு மாநிலங்கள் தடை விதிக்கவில்லை, மாறாக மருத்துவ பரிசோதனைகளும், தனிமைப்படுத்து கொள்ளுதலும் கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டுள்ளன,” எனக் கூறுகிறார் பேராசிரியர் டவோமி.

ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில், அடிப்படை சேவைகளான மருத்துவம், பள்ளிகள், பொது போக்குவரத்து, காவல்துறை மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. ஆனால்,  வர்த்தகம், பாதுகாப்புத்துறை, குடிவரவுத்துறை, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான அதிகாரங்கள் மத்தியிலேயே குவிந்திருக்கிறது. ஆஸ்திரேலிய மாநிலங்களிடையே தனித்துவமான உச்சரிப்புகளோ அடையாளங்களோ பெரிதும் இல்லாமையால் மாநில உரிமைகளை பாதுகாப்பது பற்றி பெரிய அக்கறை காட்டுப்படுவதில்லை. மாநில முறைகளை ஒழிக்கலாமா என்று கூட நீண்ட விவாதம் நடந்திருக்கின்றது. ஆனால், தற்போதைய அச்சுறுத்தல் மாநிலங்களின் தேவையை வலிமையாக்கியிருக்கிறது எனலாம்.

கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்கும் விதமாக, எட்டு மாநிலங்கள் மற்றும் ஆஸ்திரேலிய ஆட்சிப்பகுதிகளின் தலைவர்களைக் கொண்டு போர்க்கால பாணியிலான தேசிய அமைச்சரவையை பிரதமர் ஸ்காட் மாரிசன் அமைத்திருப்பது வழக்கத்திற்கான மாறான நகர்வாக பார்க்கப்படுகின்றது.

சிறந்த பொருளாதார மற்றும் சமூக கொள்கை உருவாக்கத்திற்கு ‘ஆஸ்திரேலியாவின் கூட்டாட்சி முறை’ தடையாக இருப்பதாகக் கூறுபவர்களுக்கு இந்த அமைச்சரவை ஓர் அசாதாரண உருவாக்கம் எனக் கூறியிருக்கிறார் அரசியல் விமர்சகர் டாம் புர்டன். 


கொரோனா எதிரொலி: ஆஸ்திரேலிய கூட்டாட்சி முறையில் மாநிலங்கள் எல்லைகளை மூட முடியுமா? Reviewed by Author on April 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.