அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவதாக பொலிஸார் அறிவிப்பு -


நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு , களுத்துறை , கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும் கண்டி மாவட்டத்தில் அலவாத்துகொடைபொலிஸ் பிரிவு , கேகாலை மாவட்டம் வராக்காபொல பொலிஸ் பிரிவு மற்றும் அம்பாறை மாவட்டம் அக்கரைபற்று பொலிஸ் பிரிவுகளில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை ஐந்து மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு 24.04.2020 இரவு 8 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு , களுத்துறை , கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

தளர்ததப்படும் ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவதாக பொலிஸார் அறிவிப்பு - Reviewed by Author on April 25, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.