அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தங்களை தாக்காமல் இருக்க இலங்கை தமிழர்கள் செய்து வரும் செயல்! உதவி செய்யும் தமிழர்...


தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக, மிகவும் சிரமப்படும் இலங்கை தமிழர்கள் உதவியை எதிர்பார்த்து காத்துள்ள நிலையிலும் நோய் தங்களை பாதிக்காதவாறு கடும் கட்டுபாடுகளை விதித்து கொண்டுள்ளனர்.
பூலுவப்பட்டியில், 1990ம் ஆண்டு முதல், இலங்கை முகாம் செயல்படுகிறது. மொத்தம், 320 குடும்பங்கள் உள்ளன.
சென்டரிங் ஒர்க், வெல்டிங், பெயின்டிங், கட்டடங்கள் இடிப்பு உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக, வீடுகளில் முடங்கியுள்ளனர். குடியிருப்புகள் நெருக்கமாகவும், பொது கழிப்பிடங்கள் மட்டுமே உள்ளதால், ஒருவர் பாதிக்கப்பட்டாலும் மற்றவர்களுக்கும் கொரோனா வரும் ஆபத்து என்பதை உணர்ந்து, அவர்களே கடும் கட்டுப்பாடுகளை விதித்து கொண்டனர்.


குடியிருப்புக்குள் செல்ல, ஒரு வழி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது, மற்ற வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. அவசர தேவைக்காக வெளியில் செல்வோர் மதியம், 1:00 மணிக்குள் முகாமுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
காய்கறி, முடிவெட்டும் கடைஉள்ளிட்டவற்றை முகாமிலேயே அமைத்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் வழங்கிய, 1,500 ரூபாயை வைத்து நாட்களை கடத்துகின்றனர்.
அதிலும், ரேஷன் கார்டு இல்லாத 40 குடும்பங்கள் அரிசி கூட கிடைக்காமல் தவிக்கின்றனர்.
வெளியில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர், தன் நண்பர்கள் வாயிலாக அவ்வப்போது பரந்து மனதுடன் உதவி வருகிறார்.
வரும் நாட்கள் மேலும் சிரமமாகும் என்பதால், உணவு மற்றும் மற்ற உதவிகளுக்கு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கொரோனா தங்களை தாக்காமல் இருக்க இலங்கை தமிழர்கள் செய்து வரும் செயல்! உதவி செய்யும் தமிழர்... Reviewed by Author on April 25, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.