அண்மைய செய்திகள்

recent
-

இதுவரை உலக நாடுகளை உலுக்கிய தொற்று நோய்கள்! காலரா முதல் கொரோனா வைரஸ் வரை -


உலகை இதுவரை உலுக்கிய தொற்று நோய்கள் என்ன, இதனால் எத்தனை மக்கள் இறந்துள்ளனர் என்று பார்க்கலாம்.
பிளேக் டெத்
பிளேக் டெத் எனப்படும் பியுபோனிக் பிளேக் 1347-51ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய ஒரு தொற்று நோய் பிளேக் டெத்.
எலியில் இருந்து இந்த வைரஸ் பரவியது. ஐரோப்பா 30 முதல் 50% மக்கள் தொகையை இழந்தது.
சுமார் 200 மில்லியன் மக்கள் இறந்தனர். இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர ஐரோப்பாவுக்கு 200 ஆண்டுகள் பிடித்தது.
சின்னம்மை
1520ல் மெக்சிகோவில் வெடித்த சின்னமைக்கு 56 மில்லியன் மக்கள் பலியாயினர்.
சின்னம்மையின் நோய்காப்புக் காலம் 10 லிருந்து 21 நாட்களாகும். இது நோயுற்ற ஒருவர் தும்முவதினாலும் இருமுவதினாலும் சுலபமாக மற்றவர்களுக்குப் பரவுகிறது.
ஸ்பானிஷ் புளூ
1918-19களில் ஸ்பானிஷ் நாட்டில் பரவிய புளூவுக்கு ஸ்பானிஷ் புளூ என்றே பெயரிடப்பட்டது. இதற்கு 40-50 மில்லியன் மக்கள் பலியாயினர்.
ஜஸ்ட்டினியன் பிளேக்
541-42ஆம் ஆண்டுகளில் பரவிய ஜஸ்ட்டினியன் பிளேக் 30-40 மில்லியன் மக்களின் உயிரைக் குடித்தது.
இந்த வைரசும் சீனாவில் இருந்து அல்லது இந்தியாவில் இருந்து எகிப்து பள்ளத்தாக்கிற்கு பரவியதாக கூறப்பட்டது. இது ஒரு பாக்டீரியா தொற்று.
ஹெச்ஐவி-எய்ட்ஸ்
1981ல் பரவிய எய்ட்ஸ் உலகம் முழுவதும் 25-30 மில்லியன் மக்களை காவு கொண்டது.
மூன்றாவது பிளேக்
1855ல் பரவிய மூன்றாவது பிளேக்கிற்கு உலகம் முழுவதும் சுமார் 12 மில்லியன் மக்கள் பலியாயினர். சீனாவின் யுனான் மாகாணத்தில் இந்த தொற்று உருவானது.
இந்த தொற்றுக்கு அதிகமாக சீனா மற்றும் இந்தியாவில் பலியாயினர்.
இதைத்தொடர்ந்து தெற்கு ஆப்ரிக்காவில் இருந்து சான் பிரான்சிஸ்கோ வரைக்கும் இந்த தொற்றுக்கு ஆயிரக்கணக்கில் பலியாயினர்.
ஆன்டோனைன் பிளேக்
165-180களில் பரவிய ஆன்டோனைன் பிளேக் 5 மில்லியன் மக்களின் உயிரை காவு வாங்கியது.
இத்தாலியன் பிளேக்
1629-31ஆம் ஆண்டுகளில் பரவிய இத்தாலியன் பிளேக்கிற்கு 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் பலியாயினர்.
​தி கிரேட் பிளேக் ஆப் லண்டன்
1665 - 1966ஆம் ஆண்டுகளில் வெடித்த இந்த பிளேக் நோய்க்கு 75000 முதல் 1 லட்சம் மக்கள் மக்கள் இறந்தனர்.
தி கிரேட் பிளேக் மார்செல்லி
1720ஆம் ஆண்டில் வெடித்த இந்த பிளேக் நோய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிரான்சுக்கு பரவியது. இதற்கு 1 லட்சம் மக்கள் பலியாயினர்
​ஆசியன் புளூ
1957-58ஆம் ஆண்டுகளில் பரவிய ஆசியன் புளூவுக்கு 1.1 மில்லியன் மக்கள் இறந்தனர் .
ஹாங்காங் ரஷ்யன் புளூ
1968-70 ஆம் ஆண்டுகளில் வெடித்த ஹாங்காங் புளூவுக்கு ஒரு மில்லியன் மக்கள் பலியாயினர்
1889-90களில் பரவிய ரஷ்யன் புளூவிற்கு ஒரு மில்லியன் மக்கள் பலியாயினர்
காலரா
1817-1923ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆறு முறை பரவிய காலரா நோய்க்கு மொத்தம் ஒரு மில்லியன் மக்கள் பலியாயினர்
​எபோலா
சூடானிலும் காங்கோ மக்கள் குடியரசிலுமே முதலில் எபோலா தோன்றியதாக கூறப்படுகின்றது.
2014-16ஆம் ஆண்டுகளில் பரவிய எபோலா நோய்க்கு 11,300 பேர் பலியாயினர்.
ஜப்பான் சின்னம்மை
735-37 ஆம் ஆண்டுகளில் ஜப்பானில் வெடித்த சின்னம்மைக்கு ஒரு மில்லியன் மக்கள் பலியாயினர்.
18ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிளேக்
1700ஆம் ஆண்டுகளில் வெடித்த 18ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிளேக்காக கருதப்படும் தொற்று நோய்க்கு 6 லட்சம் பேர் பலியாயினர்.
ஸ்வைன் ஃப்ளூ
2009-10ஆம் ஆண்டுகளில் பரவிய ஸ்வைன் புளூவுக்கு 2 லட்சம் பேர் பலியாயினர்
யெல்லோ பீவர்
1800ஆம் ஆண்டுகளின் பின்னாட்களில் வெடித்த யெல்லோ பீவருக்கு சுமார் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பேர் பலியாயினர்.
மெர்ஸ் வைரஸ்
2015ஆம் ஆண்டில் வெடித்த இந்த தொற்று நோய் தற்போதும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது பரவிய இந்த தொற்று நோய்க்கு 850 பேர் பலியாயினர்.
இந்த நோய் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட சவூதி அரேபியாவுக்கு வெளியே இந்த வைரஸ் இத்தனை பெரிய அளவில் பரவியிருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
இவ்வகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், நுரையீரல் ஒவ்வாமை மற்றும் சிறுநீரகம் செயல் இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.
​சார்ஸ் வைரஸ்
2002-03ஆம் ஆண்டுகளில் உலக மக்களை மீண்டும் அச்சத்துக்கு உள்ளாக்கிய மிகவும் கொடுமையான தொற்று நோய் சார்ஸ்.
இந்நோயின் ஆரம்பகால அறிகுறிகள் காய்ச்சல், தசைபிடிப்பு, சோம்பல், இருமல், தொண்டை புண் மற்றும் பிற குறிப்பிடப்படாத நோய்க்குறிகள் ஆகியவையாகும்.
இது நவம்பர் 2002க்கும் யூலை 2003க்கும் இடைப்பட்டக் காலத்தில் ஆங்காங்கில் காணப்பட்ட இந்த நோய் திடீர் நோய்ப்பரவலாகி உலகளவில் 8,422 பேர் பாதிக்கப்பட்டு 916 பேர் உயிரிழந்தனர்
உலக சுகாதார அமைப்பு நோயாளிகளில் 10.9% பேர் உயிரிழந்ததாக மதிப்பிட்டுள்ளது. நோய் உண்டான சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு இந்நோய் பரவியது.
கோவிட் 19
கொரோனா வைரஸ் சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவத்தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகின் 165 நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
இதில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், எசுப்பானியா, இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், சீனா, ஈரான், ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, நோர்வே ஆகிய நாடுகளில் அதிக அளவில் பாதிப்புக் காணப்படுகிறது.
17 ஏப்ரல் 2020 அன்றைய நிலவரப்படி, 210 நாடுகளில், 2,159,450 இதற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, இவற்றுள் 145,568 இதற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் 549,592 இதற்கும் அதிகமானோர் மீண்டு வந்துள்ளனர்.
இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் இன்று பல உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றனர்.

இதுவரை உலக நாடுகளை உலுக்கிய தொற்று நோய்கள்! காலரா முதல் கொரோனா வைரஸ் வரை - Reviewed by Author on April 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.