அண்மைய செய்திகள்

recent
-

மற்றவர்களுடைய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தனித்திருப்போம்-ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை. (VIDEO,PHOTOS)-

கொரோனா தாக்கத்தினால் உலகம் முழுவதும் வாழும் மக்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.இவ் வேளையில் உங்கள் அனைவருக்கும் அச்சம் இருக்கலாம்.நீங்கள் பல வைகயிலும் துன்பப்படலாம்.இப்படியான ஒரு வேளையிலே நாங்கள் கட்டாயமாக பாதுகாப்புடன் வாழ வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

-மன்னார் ஆயர் இல்லத்தில்  இன்று (2) வியாழக்கிழமை   மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,

எங்களை ஊரடங்குச் சட்டம் ஊடாகவும்,அறிவூறுத்தல்கள் வழியாகவும் வீட்டிலே இருக்குமாறு தெரிவிப்பதை நாங்கள் செவி மடுக்கின்றோம்.

அதற்கு எமது ஒத்துழைப்பை கொடுப்போம்.நாங்கள் தனித்திருப்பதும் எங்களை நாங்கள் பாதுகாப்புடன் வைத்திருப்பதும் மிகவும் அவசியமாக உள்ளது.

ஒருவரினுடைய தவரினாலே பல நபர்களுக்கு தொற்றக் கூடிய ஒரு வியாதி. ஆகையால் தான் உலகம் முழுவதும்  வேவ்வேறு நாடுகள்  வேவ்வேறு  விதத்தில் மக்களை தனித்து இருக்குமாறு கேட்கின்றார்கள்.

 நாங்களும் எமக்கு  வேவ்வேறு அவசியங்கள் இருந்தாலும் எமது வாழ்க்கை முறையிலே நாங்கள் அங்கும் இங்கும் செல்வது பழக்கமாக இருந்தாலும் நாங்கள் எமது மக்களுக்காகவும், எம்மை சூழ்ந்து இருப்பவர்களுக்காகவும் எமது நாட்டு மக்களுக்கு மாத்திரம் இன்றி இந்த உலகில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்காகவும் எமது பாதுகாப்பையும் மற்றவர்களுடைய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு நாங்கள் தனித்திருப்போம்.

குறித்த நோயினை மற்றவர்களிடத்தில் எடுத்துச் செல்லாது இருக்க இக்காலத்தில் வாழுவோம்.

வழமையாக நாங்கள் ஆலயங்களுக்குச் சென்று செபிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தாலும், இந்த நேரத்தில் நாங்கள் உங்களிடம் அப்படியான பொது இடங்களுக்கும் செல்லாமல் இருங்கள் என கேட்க வேண்டியுள்ளது.

அதனை நாங்கள் விரைவில் முடித்துக் கொள்ளுவோம் என்ற அந்த எதிர் நோக்குடன் நாங்கள் இறைவனை பிரார்த்திப்போம்.

இத் தொற்று நோயை அடக்கி ஒடுக்க மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வழியாக இவற்றுக்கு சரியான மருத்துவங்கள் கிடைக்கப் பெற்று குறித்த வைரஸ் தொற்றிற்கு விரைவில் முடிவு வர வேண்டும் என்று நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.

எனினும் இக்கால கட்டத்தில் நாங்கள் இறைவனை பார்த்து செபிப்போம்.

எமது மதங்களுக்கு ஏற்ப செபத்தினால், ஒருத்தல்களினால், மற்றவர்களுக்கு செய்யக்கூடிய உதவிகள் வழியாகவும் நாங்கள் இக்கால கட்டத்தை செலவழிப்போம்.

-கத்தோழிக்க மக்களுக்கு இது ஒரு தவக்காலம். தவக்காலத்திலே நாங்கள் விசேடமாக யேசுவின் பாடுகளை பற்றி சிந்தித்து அவர் எங்களுக்காக பாடுபட்டு சாவை வென்று தந்தார்.

அவர் எமக்கு மீட்பை பெற்றுத்தந்தார் என்று நாங்கள் சிந்திக்கும் வேலையில் எமது குறைகள், தவறுகளில் இருந்து விடு படுவதற்கும் நாங்கள் எமது வாழ்க்கையை சரியாக மீள் அமைத்துக்கொள்ளவும் இக்கால கட்டத்தை உபயோகிப்போம்.

கத்தோழிக்கர்களாகிய எமக்கு எதிர் வரும் வாரம் புனித வாரமாக கிடைக்கப் பெறுகின்றது.

40 நாற்கள் இத் தவக்காலத்திலே செபத்திலும்,தவத்திலும் இருந்த நீங்கள் இப்பொழுது புனிதமான வாரத்திற்குள் உற்புகுந்து இறைவனை அனுகி செல்வதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்றது.

இந்த நிலையில் நீங்கள் கோயிலுக்குச் சென்று புனித வார வழி பாடுகளில் கலந்து கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றீர்கள். ஆனால் தொலைக்காட்சி, இணையத்தளங்கள் ஊடாக உங்களுக்கு கிடைக்கக்கூடிய வழிபாடுகளுடன் இணைந்து கொள்ளுங்கள். இறைவனை மன்றாடுங்கள்.

மன்னார் மறை மாவட்டத்திலே எமது பேராலயமாக இருக்கின்ற புனித செயஸ்தியார் பேராலயத்தில் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை   திருப்பாடுகளின் ஞாயிறு மற்றும் புனித வாரத்தின் ஞாயிறு தினத்தில் செபஸ்தியார் பேராலயத்தில் காலை 7 மணிக் கு  திப்பலி எனது தலைமையில் ஒப்பக்கொடுக்கப்படும்.

அதிலே உங்கள் அனைவருக்காகவும் செபிப்பேன். மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் இலங்கை வாழ்,உலக வாழ் மக்களுக்காக செபிப்போம்.

மேலும் ஒரு தினத்தில் மடு அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு உங்கள் அனைவருக்காகவும் செபிப்போம்.என மன்னார் மறைமாவட்ட ஆயர்  மேலும் தெரிவித்தார்.

மற்றவர்களுடைய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தனித்திருப்போம்-ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை. (VIDEO,PHOTOS)- Reviewed by Author on April 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.