அண்மைய செய்திகள்

recent
-

மாத்திரைகளின்றி குடலை சுத்தம் செய்ய வேண்டுமா? இதே சில எளிய வழிகள் -


குடல் மனித உள்ளுருப்புகளில் முக்கியமானது ஆகும். குடல் இருவகைகள் உண்டு அவை சிறுகுடல் மற்றும் பெருங்குடல் என்று இருவகைப்படும்.
குடலானது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், உப்பு மற்றும் நீரை கழிவுகளில் வெளியேற்றுவதற்கு முன்பு பிரித்தெடுக்கிறது, pH அளவைப் பராமரிக்கிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடும் தொழிலை புரிகின்றது.
ஒருவரது குடலில் கழிவுகள் அதிகம் தேங்கினால், அது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

ஒருவரது குடல் சரியாக செயல்படாமல் இருந்தால் சரும அழற்சி, பித்தப்பை கற்கள், இதய நோய்கள் போன்ற கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதிலிருந்து விடுபடவும் குடலை சுத்தம் செய்யவும் சில இயற்கை உணவு முறைகள் பெரிதும் உதவி புரிகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
  • பசலைக்கீரை, கேல், அஸ்பாரகஸ், கொலார்டு கீரைகள், பட்டாணி போன்றவற்றில் குளோரோஃபில் அதிகம் உள்ளது. இந்த காய்கறிகள் கல்லீரலையும் சுத்தம் செய்கிறது. அதனால் காய்கறிகளை வேக வைத்தோ, சூப்பில் சேர்த்தோ அல்லது வெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் சேர்த்து வதக்கியோ சாப்பிடலாம்.
  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் இஞ்சி ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து கலந்து, இந்த கலவையை தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும்.
  • இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் ,ஆப்பிள் - 1 ,பசலைக்கீரை - 1 கப் ,கேரட் - 1 பொருட்களை அனைத்தையும் பிளெண்டரில் போட்டு, அத்துடன் 1 கப் நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இஞ்சி ஸ்மூத்தி தயார். இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்தால், குடல் பாதையின் செயல்பாடு சரியாக நடைபெறும்.
  • 1/2 கப் ஆப்பிள் ஜூஸ் உடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி ஜூஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் 1/2 கப் வெதுவெதுப்பான நீரை, அந்த ஜூஸ்களுடன் சேர்த்து கலந்து, தினமும் ஒரு முறை குடித்து வந்தால், குடல் சுத்தமாவதுடன், செரிமானமும் சிறப்பாக நடைபெறும்.
  • டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 கப் நீர் சேர்த்து கலந்து, தினமும் ஒருமுறை குடிக்க வேண்டும். இந்த பானம் டாக்ஸின்களை நீங்குவதோடு மட்டுமின்றி, சர்க்கரையை நோயைத் தடுப்பது, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைத் தடுக்கும்.
  • பீன்ஸ், பருப்பு வகைகள், திணை, ஓட்ஸ அல்லது காய்கறிகளான பீன்ஸ், புருஸல்ஸ் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளவற்றை சேர்த்து கொள்ளலாம். ஏனெனில் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், குடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடலை சுத்தம் செய்வதற்கும், நார்ச்சத்து பெரிதும் உதவி புரியும்.
  • குடல் ஆரோக்கியத்திற்காக ஒருவர் ஒரு நாளைக்கு 2 முதல் 2.5 மிலி வரை நீர் பருக வேண்டியது அவசியம். அதுவும் 1/2 விட்டர் நீரில் 1 டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இச்செயலால் குடல் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.
  • ஆளி விதைகளை நீரில் சேர்த்து ஊற வைத்து, சாலட்டுகள், மில்க் ஷேக் போன்றவற்றின் மேலே தூவி உட்கொள்ளலாம்.
  • ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளை ஒரு கப் நீரில் 5-10 நிமிடம் வரை ஊற வைத்து பின் அந்த விதைகளை ஒரு கப் தயிருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை ஒரு நாளைக்கு 4 முறை என தொடர்ந்து 4 வாரங்கள் உட்கொண்டால், குடல் பாதை சுத்தமாகும்.

மாத்திரைகளின்றி குடலை சுத்தம் செய்ய வேண்டுமா? இதே சில எளிய வழிகள் - Reviewed by Author on April 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.