அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 03 இடங்களில் 07 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் DR.தர்மராஜா வினோதன்-VIDEO,PHOTOS)-

வவுனியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படை வீரர் ஒருவருடன் நெருங்கி பழகிய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சாரதி ஒருவர் அலுவலக பணியின் நிமித்தம் மன்னாருக்கு வந்து சென்றுள்ள நிலையில் மன்னாரில் மூன்று இடங்களில் 7 நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜா வினோதன் தெரிவித்தார்.

-மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை(28) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

அண்மையில் விடுமுறையில் சென்று மீண்டும் வவுனியா திரும்பிய கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அவருடன் நெருங்கி பழகிய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சாரதி ஒருவர் மன்னாருக்கு வந்து சென்றுள்ளார்.
குறித்த சாரதி அலுவலக பணிக்காக வந்து மூன்று இடங்கள் சென்றுள்ளார்.
குறித்த மூன்று இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த மூன்று இடங்களில் இருந்த 7 பேர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதை விட மன்னார் மாவட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினுடைய தலைமை அலுவலகத்திற்கும் குறித்த சாரதி வந்து சென்றுள்ளமையினால் குறித்த அலுவலகத்தில் இருக்கின்ற சில உத்தியோகத்தர்களை அலுவலகத்தில் இருந்து கொண்டே கடமையாற்றும் படியும் அவர்களை வெளியில் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இவர்கள் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்றவர்கள். இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதாக என்பதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

பரிசோதனை முடிவடைந்தவுடன் குறித்த அலுவலகம் மீண்டும் வழமை போல் இயங்க அனுமதிக்கப்படும்.

ஏனையவர்களுக்கு பரிசோதனை செய்வதற்கு முன்னர் குறித்த சாரதிக்கும் வவுனியாவில்  கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதா என்கின்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.அந்த பரிசோதனைகளின் முடிவுகளுக்கு அமைய ஏனையவர்களுக்கான பரிசோதனை தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படும்.

-மேலும் மன்னார் நடுக்குடா பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தி வேளைத்திட்டத்தில் கலந்து கொண்டுள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்த பணியாளர்கள் சிலருக்கு நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

-அதன் முடிவுகள் வெளி வர உள்ளது.வெளி மாவட்டங்களில் இருந்து அவர்கள் அனுமதி பெற்று வந்தாலும் மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை என்ற காரணத்தினால் அவர்களிடம் தேர்ந்தெடுத்த மாதிரிகளை கொண்டு அவர்களுக்கு இவ்வாறான சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

வெளி மாவட்டங்களுக்கு அடிக்கடி சென்று வருகின்ற சில சாரதிகளும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.


மன்னாரில் 03 இடங்களில் 07 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் DR.தர்மராஜா வினோதன்-VIDEO,PHOTOS)- Reviewed by Author on April 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.