அண்மைய செய்திகள்

recent
-

இரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்…பதறவைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்!

கணவனால் கத்தியால் குத்தப்பட்டு, படுக்கையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் பிள்ளைகளைக் கண்ட அந்த பதைபதைக்கும் நொடிகளைக் குறித்து விவரித்துள்ளார் குழந்தைகளின் தாயாரான இலங்கைத் தமிழ்ப்பெண்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனைப்பகுதியை சேர்ந்த நிதின் குமார் என்பவரே இந்த பாதகத்தை புரிந்துள்ளார். அவரது மனைவி நிஷாந்தனி(நிஷா) நடந்த சம்பவங்களை இங்கிலாந்து ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்

கிழக்கு லண்டனிலுள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிஷாந்தனி குமார் (35), ஞாயிற்றுக்கிழமை மதியம் குளியலறையிலிருக்கும்போது, தன் குழந்தை வாந்தியெடுக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்திருக்கிறார்.

அங்கு அவர் கண்ட காட்சி அவரை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

படுக்கையறையில், நிஷாந்தனியின் மூத்த மகன் மூன்றரை வயதான நிஷ் மற்றும் ஒரு வயதான மகள் பபின்யா இருவரும் இரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடந்திருக்கிறார்கள். அருகில் அவரது கணவர் நிதின் குமார் (40) கையில் ஒரு கத்தியுடன் முழங்காலிட்டு அமர்ந்திருக்கிறார்.

சட்டென தன் பிள்ளைகள் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்கள் என்ற விடயம் மூளைக்கு உறைக்க, என்ன செய்தீர்கள் என் குழந்தைகளை, என்ன நடந்தது, என வீறிட்டு அலறியபடி சமையலறைக்கு ஓடியிருக்கிறார்.

வெட்டுக்காயத்துடன் கிடந்த மகனின் கழுத்தில் இரத்தப்போக்கை நிறுத்த பிரிட்ஜிலிருந்து ஐஸ் கட்டிகளை எடுத்துவந்து முயன்றிருக்கிறார்.மகளிடமோ எந்த அசைவும் இல்லை என்பதையும் கவனித்திருக்கிறார் அவர்.

அதற்குள் நிதின் கத்தியுடன் நிஷாவையும் துரத்தத் தொடங்க, கத்தியைத் தட்டிவிட்ட நிஷா, குளியலறைக்குள் ஓடிச்சென்று 999ஐ அழைத்து தன் பிள்ளைகள் குத்தப்பட்டுள்ளார்கள் என்று கூறி ஆம்புலன்சை அனுப்பும்படி கதறியிருக்கிறார்.

மீண்டும் குழந்தைகளைக் காண ஓடோடிச் செல்லும்போது, நிதினும் தன் கழுத்திலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட நின்றிருந்திருக்கிறார்.

என்னை மன்னித்து விடு, அவர்கள் என்னைக் கொன்றுவிட்டு நம் பிள்ளைகளை ஏதவாது செய்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது என்று ஏதேதோ உளறிக்கொண்டிருந்திருக்கிறார் தடுமாற்றத்துடன் நிதின்.

மன நலம் பாதிக்கப்பட்டவர் போல், அவர்கள் எப்படி தன்னை பிடிக்கப்போகிறார்கள், குழந்தைகளை காப்பாற்றுவது எப்படி என்றெல்லாம் உளறியபடி மயங்கிச் சரிந்திருக்கிறார் நிதின்.

அவருக்கு ஏதோ மன நலப் பிரச்சினை இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறார் நிஷா.

நிதின் 1999இலிருந்தே பிரித்தானியாவில் வசித்து வந்த நிலையில், நிஷாவுக்கும் நிதினுக்கும் இலங்கையில் வைத்து 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிஷா 2015ஆம் ஆண்டுதான் பிரித்தானியா வந்தார்.

அவர்களது இரண்டு பிள்ளைகளும் பிரித்தானியாவில்தான் பிறந்துள்ளார்கள்.

பிரித்தானியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் உயிரிழந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு தொடர்ந்து தங்கள் அஞ்சலியைச் செலுத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில், தன் குழந்தைகளைக் கொன்றுவிட்டார் என்ற கோபம் ஒரு பக்கம் இருந்தாலும்,

அவர் ஒரு கனிவான மென்மையான மனிதர், மிகவும் மென்மையாகப் பேசுபவர் இதில் எதுவுமே அர்த்தமில்லாமல் போய்விட்டது.இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டேன் என குறிப்பிட்டுள்ளார் நிஷா.

இந்த நேரத்தில் நான் அவரைப் பற்றி எப்படி உணருகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை

ஆனால் அவர் வாழ விரும்புகிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது , ஆனால் நான் என் குழந்தைகள் வந்துவிட்டேன் இப்பொழுது நானும் ஒரு விதவையாக முடியும்

மருத்துவமனையில் இருக்கும் கணவர் எப்படி இருகிறார் என்பதை அறிய தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் விசாரித்து வருகிறார் நிஷா.

நான் என் பிள்ளைகளை படுக்கையில் ரத்த கோலத்தில் கண்டேன் கண்டேன். அவர்கள் ரத்தத்தால் மூடப்பட்டிருந்தனர் அவர்களை சுவாசிக்க வைக்க போராடினேன் இந்த காட்சிகளின் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கப் போகிறது,என்னால் இரவில் தூங்க முடியாது இந்த காட்சிகள் நினைவுக்கு வருகிறது இது கற்பனைக் கெட்டாத மோசமான கனவை போன்றது, நான் என்ன செய்கிறேன் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லைகடவுள் என்னை ஏன் சோதிக்கிறார் என்று எனக்கு புரியவில்லை.

மகிழ்ச்சியாக வாழலாம் என பிரித்தானியாவுக்கு வந்தேன், குழந்தைகளை இழந்துவிட்டேன், ஒருவேளை இனி விதவையாகவும் ஆகிவிடலாம் என பதட்டத்துடன் கண்ணீர் வடிக்கிறார் நிஷா.

இரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்…பதறவைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்! Reviewed by Author on April 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.