அண்மைய செய்திகள்

recent
-

நாடு திறந்து விடப்பட்டு மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கு ஜனாதிபதியும், இராணுவத்தினருமே பொறுப்பு -


தேர்தலுக்காக நாடு திறந்து விடப்பட்டு அதன் காரணமாக மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கு ஜனாதிபதியும், இராணுவத்தினருமே பொறுப்பு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேற்றையதினம் பேருந்தில் அழைத்துவரப்பட்டு இராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் வேறுஎந்த இடங்களிலும் இராணுவ முகாம் இல்லையா என்ற கேள்வி இதனால் எழுகின்றது.

அத்தோடு வடக்கிலும், கிழக்கிலும் பாரியளவிலான இராணுவத்தளங்கள் குவிக்கப்பட்டு இருக்கின்றன என்பதனை இந்த நடவடிக்கை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் தேர்தல் குறித்து அரசாங்கம் பேசிவருகின்றது. மக்களை பொறுத்தவரை தேர்தல் என்பது அவசியமானதொன்றல்ல.
எனவே தேர்தலுக்காக நாடு திறந்து விடப்பட்டு அதன் காரணமாக மரணங்கள் சம்பவிக்குமானால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இராணுவத்தினரும் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நாடு திறந்து விடப்பட்டு மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கு ஜனாதிபதியும், இராணுவத்தினருமே பொறுப்பு - Reviewed by Author on April 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.