அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் எதிர் வரும் 11 ஆம் திகதிக்கு பின்னரான இயல்பு நிலை தொடர்பில் அரச அதிபர் தலைமையில் ஆராய்வு

வாடிக்கையாளர் ஒருவருக்கு பயண்படுத்துகின்ற துணியை இன்னும் ஒரு வாடிக்கையாளருக்கு பயண்படுத்த முடியாது.எனவே சிகையலக்கரிப்பு நிலையங்களுக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் சுகாதாரம் கருதி துணியை தாங்களே கொண்டு செல்ல வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் விசேட செயலனியின் தலைவர் பசில் ராஜபக்ஸ அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில்  இன்று (7) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள்,இராணுவ அதிகாரிகள்,திணைக்கள தலைவர்கள் உற்பட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொரிவிக்கையிலேயே மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

-எதிர் வரும் 11 ஆம் திகதி காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்படுகின்ற நிலையில் மாவட்டத்தின் இயல்பு நிலை தொடர்பாக ஆராயப்பட்டது.

-குறிப்பாக இடம் பெறவுள்ள அத்தியாவசிய கடமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.சிறு முயற்சியாளர்களின் வேளைத்திட்டங்கள் அணைத்தும் வழமைக்கு திரும்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராய குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது. சுகாதாரம் தொடர்பில் ஆராயப்பட்டது.

-பாடசாலைகளை தவிர அரச,தனியார் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கினால் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

-கலை நிகழ்வுகள்,மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள்,கழியாட்ட நிகழ்வுகள்,மதஸ்தளங்களில் பூசை போன்ற மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த நடவடிக்கைகள் வழமை நிலைக்கு திரும்பாது.

-அரச நிறுவனங்களும்,சிறு தொழில் முயற்சியாளர்களின் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தது போல் சுகாதார நடவடிக்கைகள், இடை வெளியை பேணுதல் உள்ளிட்டவை கடை பிடிக்கப்பட வேண்டும்.

அரச தனியார் போக்கு வரத்து சேவைகள் இடம் பெறுகின்ற போது இடை வெளி பேனப்பட வேண்டும். பேரூந்துகளில் பயணிகளை முழுமையாக ஏற்ற முடியாது.

அலுவலகங்களில் கை கழுவுவதற்கான நடை முறை,இடை வெளியை பேணுதல் என்பன தொடர்ச்சியாக நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என தீர்மாணிக்கப்பட்டது.மேலும் முடிந்த வரை அலுவலகங்கள், வேளைத்தளங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். 

மேலும் வர்த்தக சம்மேளனம், சிகையலங்கரிப்பு, பஸ் போக்கு வரத்து தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக சிகையலக்கார நிலையங்கள் திறக்கப்படுகின்ற போது பின் பற்றப்பட வேண்டிய விடையங்கள் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது. ஒரு வாடிக்கையாளருக்கு பயண் படுத்துகின்ற துணியை இன்னும் ஒரு வாடிக்கையாளருக்கு பயண்படுத்த முடியாது.

எனவே சிகையலக்கரிப்பு வருகின்ற வாடிக்கையாளர்கள் சுகாதாரம் கருதி தாங்கலே துணியை கொண்டு செல்ல வேண்டும்.மேலும் முடிந்தவரை முகச்சவரம் செய்வதை(சேவிங்) தவிர்த்துக்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

-மேலும் பயண்படுத்துகின்ற உபகரணங்கள் உடனுக்குடன் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.மக்கள் ஒன்று கூடுவதையும் தவிர்க்க வேண்டும். குறித்த அறிவுறுத்தல்களை சகல சிகையலக்கரிப்பு நிலையங்களும் பின் பற்ற வேண்டும்.மேலும்  கொழும்பு,ஹம்பகா,களுத்துரை,புத்தளம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் இங்கு வர பாஸ் நடை முறை அமுல் படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் சோதனைச்சாவடியில் பரிசோதனை செய்த பின்பே அவர்கள் மன்னார் மாவட்டத்தினுல் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

 நாட்டின் பொருளாதாரத்தை தொடர்ந்தும் இழக்க முடியாததன் காரணத்தினால் குறித்த ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப் படுகின்றது.எனவே மக்கள் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்திற்கான நடை முறைகளை பின் பற்ற வேண்டும்.

மாவட்டத்தின் எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் சோதனை நடவடிக்கைகள் இடம் பெறும்.ஊரடங்குச் சட்டம் இல்லாததினால் பாஸ் நடைமுறை இல்லை.

மன்னாரில் இருந்து கொழும்பு,புத்தளம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்ற போது பாஸ் பெற்றுக்கொண்டே செல்ல வேண்டும்.

வெளி மாவட்டங்களுக்கு நெல் மற்றும் அரிசி போன்றவை கொண்டு செல்வது தொடர்பாக தீர்மானங்களை நாங்கள் மீள் பரிசீலினை செங்து வருகின்றோம்.எங்களுக்கு தேவையான நெல்லை தவிர மேலதிகமாக உள்ள நெல்லை வெளி மாவட்டத்திற்கு கொண்டு செல்ல தீர்மானங்களை மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
 



மன்னார் மாவட்டத்தில் எதிர் வரும் 11 ஆம் திகதிக்கு பின்னரான இயல்பு நிலை தொடர்பில் அரச அதிபர் தலைமையில் ஆராய்வு Reviewed by Admin on May 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.