அண்மைய செய்திகள்

recent
-

3000-பேர் ஜுன் முதல் தினமும் பலியாவார்கள்...அமெரிக்காவில் வெளியான அறிக்கை! பீதியில் மக்கள் -


அமெரிக்காவில் ஜுன் முதல் திகதி முதல் கொரோனவால் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்கள் என்ற கணிப்பு வெளியாகியுள்ளதால், அங்கிருக்கும் மக்கள் பீதியில் உள்ளனர்.
உலகின் வல்லரசு நாடு என்ற தன்னை பெருமையாக கூறிக் கொள்ளும் அமெரிக்கா, தற்போது கண்ணுக்கு தெரியாத
கொரோனா வைரசின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.
இந்த நாடு, மற்ற நாடுகளை விட அதிக பாதிப்பை தினமும் சந்தித்து வருகிறது
கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலி வேகமாக 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அங்கு ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்தி, பொருளாதார நடவடிக்கைகளை பல மாகாணங்களும் திறந்து விடுகின்றன.


ஜார்ஜியா, மிசிசிப்பி, டென்னிசி, டெக்சாஸ், இல்லினாய்ஸ், அலாஸ்கா, அரிசோனா, ஆர்கன்சாஸ், கொலரோடோ, புளோரிடா, கன்சாஸ், மின்னசோட்டா, மிசவுரி, மோண்டனா, நெப்ராஸ்கா, நியுஹம்ப்ஷயர், ஓஹியோ, தெற்கு கரோலினா, வெர்மாண்ட், மேற்கு வெர்ஜீனியா ஆகியவை கட்டுப்பாடுகளை நீக்கிய மாகாணங்களாக உள்ளன.

இந்நிலையில் அங்கு உள்நாட்டு வரைவு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
அதில், வரும் ஜூன் மாதம் 1-ஆம் திகதி முதல் கொரோனா வைரஸ் தாக்கி தினமும் 3 ஆயிரம் பேர் இறப்பார்கள் என கணித்து சொல்லப்பட்டுள்ளது.
தினசரி சுமார் 2 லட்சம் பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதால்,
இந்த தகவல்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகின்றன.

இது குறிட்து பிரபல ஆங்கில ஊடகமான நியூயார்க் டைம்ஸ், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான புள்ளி விவரங்கள், புத்திசாலித்தனமான யதார்த்தத்தை கோடிட்டுக்காட்டுவதாக அமைந்துள்ளன.
அதே நேரத்தில் அமெரிக்கா பதுங்கி உள்ளது. கடந்த 7 வாரங்களாக நிலைமையில் பெரிதான மாற்றம் எதுவும் இல்லை. பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறப்பது என்பது நிலைமையை மேலும் மோசமாக்கும் என குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய தகவல்படி, அமெரிக்காவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அந்த நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்துள்ளது. 3 கோடி அமெரிக்கர்கள் வேலையின்றி, நிவாரணம் கோரி உள்ளனர்.
இதற்கிடையே உள்நாட்டு வரைவு அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளும், தேசிய தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் நிராகரித்துள்ளன.
அதே நேரத்தில் இந்த வரைவு அறிக்கையை தயாரித்தவர், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பெர்க் சுகாதார கல்லூரியின் தொற்றுநோய் பேராசிரியர் ஜஸ்டின் லெஸ்லர் என்று கூறப்படுகிறது.
இந்த அறிக்கை குறித்து வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜட் டீரெ கூறுகையில், இந்த அறிக்கை, வெள்ளை மாளிகை ஆவணமோ, கொரோனா வைரஸ் பணிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமோ இல்லை. இந்த தரவு பணிக்குழு அல்லது தரவுகளால் செய்யப்பட்ட எந்த மாதிரியையும் பிரதிபலிக்காது என தெரிவித்துள்ளார்.
3000-பேர் ஜுன் முதல் தினமும் பலியாவார்கள்...அமெரிக்காவில் வெளியான அறிக்கை! பீதியில் மக்கள் - Reviewed by Author on May 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.