அண்மைய செய்திகள்

recent
-

6000 பாடல்கள்,100 படங்களில் பணியாற்றிய சினிமா பிரபலம் இறப்பு - திரையுலகம் சோகம்


தமிழ் சினிமா இன்று உலகளவில் தலை நிமர்ந்து நிற்கிறது. இதற்கு ஆரம்ப காலகட்டங்களில் பணியாற்றியவர்களின் உழைப்பு மிக முக்கியமானது. அவர்களின் மறைவு யாராலும் தாங்க முடியாத ஒன்று.

தற்போது ஏவி எம் சம்பத். ஆர் ஆர் தியேட்டர் சம்பத் என தமிழ் சினிமாவில் பலராலும் அழைக்கப்படும் பிரபல ஒலிப்பதிவாளர் கே சம்பத் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னாருக்கு வயது 87. திருச்சியை பூர்வீகமாக கொண்ட இவர் சென்னையில் ஒலிப்பதிவில் டிப்ளமோ முடித்து ஏ வி எம் நிறுவனத்தில் பணியை தொடர்ந்தார்.

புகழ் பெற்ற ஒலிப்பதிவாளர்களான ராபின் சட்டர்ஜி, மிஸ்ரா, முகுல் போஸ் ஜேஜே மாணிக்கம் ஆகியோருடன் பணியாற்றி உயர் நிலைக்கு வந்தார்.

ஏ வி எம் ல் 50 ஆண்டுகள் பணியாற்றியவர் 6 ஆயிரம் பாடல்களுக்கு ஒலிப்பதிவு செய்துள்ளாராம். பிரபல இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதனுடன் அவர் பணியாற்றியுள்ளார்.

இளையராஜாவுடன் 100 படங்களில் அவர் பணியாற்றியுள்ளார். சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தமிழக அரசின் விருதை மூன்று முறை பெற்றதொடு, எந்உ சொந்தம ஜானகிக்குட்டி என்ற மலையாள படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.

அவரின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

6000 பாடல்கள்,100 படங்களில் பணியாற்றிய சினிமா பிரபலம் இறப்பு - திரையுலகம் சோகம் Reviewed by Author on May 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.