அண்மைய செய்திகள்

recent
-

வேட்பு மனு நிராகரிப்பு விவகாரம் றிப்கானிடம் திட்டு வேண்டிய டெனிஸ்.கிழியும் டெனிஸின் முகத்திரை.

முன்னாள் வட மாகாணசபை உறுப்பினரும்,அமைச்சருமாகிய டெனிஸ்வரன் அவர்கள் இம் முறை பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை குழு ஊடாக போட்டி இடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பபட்ட விடயம் யாவரும் அறிந்ததே.

ஆனால் இதன் பின்னால் உள்ள மர்மம் எவருக்கும் தெரியவில்லை.

தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய முன் டெனிஸ்வரன் தெரிவிக்கையில் ,,,,

'முன்னாள் போராளிகளுக்கு அரசியலில் இடமளிக்கவில்லை எனவும்  ,அவர்களின் நலனுக்காகவும்  ,போட்டியிடுவதாகவும்' தெரிவித்திருந்தார்.

இது உண்மையா?



வவுனியா செயலகத்தில் இவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட போது கோபத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார் றிப்கான் பதியுதீன் யார் அருகில் இருக்கிறார்கள் என்று கூட அவதானிக்காமல் 'உனக்கு ஒரு form  கூடசரியா  நிரப்ப தெரியாதா'  என்று திட்டி தீர்த்து விட்டார்.உடனே எழுந்த டெனிஸ்வரன் கையிலிருந்த பைலை கூட விட்டு ஓட்டம் பிடித்தார்.

இப்பொழுது விளங்குகிறதா இவர் யாருக்கு சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்யவந்தார் என்று.

அன்றே இவ் தகவல் நியூமன்னார் இணையத்திற்கு பிரத்தியேகமாக கிடைக்கப்பெற்றது .நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக செய்தியை பிரசுரிக்க முடிய வில்லை.

டெனிஸ்வரன் ஒரு குழப்பவாதி என்பது அனைவரும் அறிந்ததே வடமாகாண சபைகாலத்தில் ஊழல்செய்தார் என்ற குற்றச்சாட்டில் முதலமைச்சரால் பதவி பறிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.

இவர் டெலோ கட்சி ஊடாக அரசியல் வாதியாகி பதவி பறிப்பின் பின் முதலமைச்சருக்கு எதிராக ஆளும்கட்சிக்குள் எதிர்க்கட்சி என செயற்பட்டு  குழப்பி அடித்தவர்களில் இவரும் ஒருவர்.

இம் முறை தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடலாம் என்ற நினைப்பு கனவாகி போனதால் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதே இவரது எண்ணமாக இருந்தது வேட்புமனு நிராகரிப்பின் மூலம் எல்லாம் மண்ணாய் போய்விட்டது.

தற்போது இவர் மன்னார் நகர சபை அபிவிருத்தி திட்டத்தை தடுக்க கையில் எடுத்திருப்பது தனியார் வாடகை வாகன தரிப்பிடம்.

இவர் அரசியல் நோக்கத்திற்காகதான் செயற்படுகிறார் என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள்.இவரது இந்த செயற்பாட்டால் ஆசிய வங்கியினால் மன்னார் நகர அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட 550 மில்லியன் ரூபா திட்டம் திரும்பக்கூடிய சாத்தியம் உள்ளதாக மன்னார் இளைஞர்கள் கொந்தளிக்கின்றனர்.

டெனிஸ்வரனுடன் சேர்ந்து இயங்கும் சில முன்னாள் போராளிகளுக்கு அன்பான வேண்டுகோள்

போராளிகளின் பெயரையும் தேசிய தலைவரின் பெயரையும் பயன்படுத்த இவருக்கு தகுதி உள்ளதா?அன்பான முன்னாள் போராளிகளே சிந்தியுங்கள்?உங்கள் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்ய முற்படுபவர்கள் மீது எச்சரிக்கையாக இருங்கள்.



வேட்பு மனு நிராகரிப்பு விவகாரம் றிப்கானிடம் திட்டு வேண்டிய டெனிஸ்.கிழியும் டெனிஸின் முகத்திரை. Reviewed by NEWMANNAR on May 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.