அண்மைய செய்திகள்

recent
-

ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியீடு: முதலிடத்தில் அவுஸ்திரேலியா அணி -


சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று ஐசிசி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தை அவுஸ்திரேலிய அணியும், இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து அணியும் , மூன்றாவது இடத்தில் இந்திய அணியும் உள்ளது.
முதல் மூன்று இடத்தில் உள்ள அணிகளுக்கு வித்தியாசம் ஒரு புள்ளிகளில் மட்டுமே காணப்படுகின்றது.

அந்தவகையில் அவுஸ்திரேலிய அணி 116 ரேட்டிங் உடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக 115 ரேட்டிங்குடன் நியூசிலாந்து 2ஆம் இடத்திலும்,
3ஆம் இடத்தில் இந்தியா 114 ரேட்டிங்கை பெற்றும் உள்ளன. அதைத்தொடர்ந்து இங்கிலாந்து (105), இலங்கை (91), தென்னாப்பிரிக்கா (90), பாகிஸ்தான் (86), வெஸ்ட் இண்டீஸ் (79) அணிகள் இடம்பெருகின்றன.

மேலும் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வந்த இந்திய அணி மூன்றரை வருடங்களுக்குப் பின்னர் முதலிடத்தை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியீடு: முதலிடத்தில் அவுஸ்திரேலியா அணி - Reviewed by Author on May 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.