அண்மைய செய்திகள்

recent
-

கூகுள் நிறுவனத்தின் அதிரடி முடிவு…..




சில தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களிடம் வீட்டிலிருந்து நிரந்தரமாக வேலை செய்ய முடியும் என்று கூறினாலும் மற்றைய நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் ஊழியர்களில் ஒரு பகுதியினரை மீண்டும் அலுவலகத்தில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளனர்.

அந்த வகையில் கூகுள் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை செவ்வாயன்று ஊழியர்களிடம் தெரிவிக்கையில்

ஜீலை 6 ஆம் திகதி முதல் நகரங்களிலுள்ள சில அலுவலகங்களை மீண்டும் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அலுவலகத்திற்கு வருகை தரக்கூடிய இடங்களிலுள்ள ஊழியர்கள் வரமுடியும்.ஆனால் ஒவ்வொரு அலுவலகமும் முதலில் சுமார் 10 சதவீத ஊழியர்களுக்கு மட்டுப்படுத்தப்படும் செப்டெம்பர் மாதத்திற்குள் 30 வீத ஊழியர்களை உள்வாங்க திட்டமிட்டுள்ளது.

“சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யப்படுவதற்காக எங்களிடம் கடுமையான சுகாதார மற்றம் பாதுகாப்பு இருக்கும்“ என்று பிச்சை வலைப்பதிவொன்றில் குறிப்பட்டுள்ளார்.எனவே நீங்கள் வெளியேறியதை விட அலுவலகம் வித்தியாசமாக இருக்கும்.

பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு இணங்க உள்ளே வருபவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் அதே வேளையில் நாங்கள் அலுவலகத்தில் நேரத்தை ஒதுக்கும் விதத்தில் நியாயமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எனவும் தெரிவித்துள்ளார்.

கூகுள் (GOOGLE) நிறுவனம் அலுவலகங்கைளை மீண்டும் திறக்கத் தீர்மானித்துள்ளார்.(TWITTER)மற்றும் பேஸ்புக் (FACEBOOK) ஆகியவற்றுடன் வேறுபடுவதைக் குறிக்கிறது.

இந்த இரு நிறுவனங்களும் தொலைதூர வேலைகளை நிரந்தர அடிப்படையில் ஆதரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளன.

ஊழியர்களுக்கான பிச்சையின் குறிப்பு பெரிய தொழிற்நுட்ப நிறுவனங்கள் இப்போது பல ஆண்டுகளாக முகாமைத்துவத்தில் தீவிர மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறது.

திரும்பி வரும் ஊழியர்களுக்கு “நீங்கள் வெளியேறுவதைவிட அலுவலகம் வித்தியாசமாக இருக்கும்“என்று சுந்தர் பிச்சை சுட்டிக்காட்டினார்.

வீட்டிலிருந்து வேலை செய்வதற்குத் தேவையான “உபகரணங்கள் மற்றும் அலுவலக தளபாடங்களுக்கு“ செலவழிப்பதற்கு தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் 1,000 டொலர் கொடுப்பனவை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் அதிரடி முடிவு….. Reviewed by Author on May 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.