அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடைமுறை தொடர்பில் அமுல் படுத்தும் சகல நடவடிக்கைகளுக்கும் முப்படையினரும் சம்மதம் தெரிவிப்பு-அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்.

மன்னார் மாவட்டத்தில் மக்கள் வாழும் பகுதிகளில் இடைத்தங்கள் முகாம் அல்லது கொரோனா தனிமைப்படுத்தும் நிலையங்களை அமைப்பதில்லை எனவும் நடைமுறைப்படுத்தும் சகல நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதாக முப்படையினரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையை மேற்கொள்ளுவது தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,.
மன்னார் மாவட்ட இராணுவ பொறுப்பதிகாரி,பொலிஸ் அத்தியட்சகர், கடற்படை அதிகாரி ஆகியோரை ஒன்றினைத்து 29-04-2020  புதன் கிழமை மாலை அவசர கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது மேலதிக அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது பாஸ் நடைமுறை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அண்மையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்த பிரச்சினைகள் தொடர்பாக தெரியப்படுத்தி இருந்தோம்.

இதன் போது குறித்த நடைமுறைக்கு தாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும், வெளி மாவட்டத்தில் இருந்து மன்னாரிற்கு வருகின்றவர்களை இங்கு தரித்து நிற்பதற்கு  அனுமதிப்பது இல்லை என்றும் பாஸ் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை தாம் ஏற்றுக் கொள்ளுவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.

அதே போல் இங்கு சில பாடசாலைகளில்'கொரோனா' இடைத்தங்கள் முகாம் இருக்கின்றது.கடற்படை வீரர்களை அங்கு வைத்துள்ளார்கள்.

இவ்விடையம் தொடர்பில் நாங்கள் வலியுறுத்தி கூறி உள்ளோம். மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இடைத்தங்கல் முகாம் அல்லது கொரோனா தனிமைப்படுத்தும் நிலையங்களையோ அமைக்க வேண்டாம் என்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமைப்பதில் எமக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்திருந்தோம்.

இவ்விடையம் தொடர்பாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளரையும் நாங்கள் கோரி உள்ளோம் பாடசாலைகளில் அனுமதிகளை வழங்கும் போது எங்களுக்கும் தெரியப்படுத்துமாறு கோரியுள்ளோம்.

மாவட்டத்தில் எங்கு என்ன நடந்தாலும் பொது மக்கள் என்னிடமே கேள்விகளை கேட்கின்றார்கள். இவ்வாறான நிலையங்களை அமைக்க ஏன் அனுமதி வழங்கினீர்கள் என கேட்கின்றனர்.

சில நேரங்களில் எங்களுக்கு தெரியாமல் நடப்பதினால் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் அனுமதி பெற்று சில நிலையங்கள் இயங்குகின்றது.

இனி வரும் காலங்களில் எமக்கு அதனை அறியத்தருமாறு கோரியுள்ளோம்.அதனடிப்படையில் முப்படையினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஏதாவது நிலையங்களை அமைப்பதாக இருந்தால் மக்கள் செறிவு குறைந்த பகுதிகளிலேயே அதனை நடை முறை படுத்துவதாக தெரிவித்தனர்.

முற்றாக நிலையங்களை அமைக்க முடியாது என நாங்கள் கூற முடியாது.என தெரிவித்தார்.





மன்னாரில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடைமுறை தொடர்பில் அமுல் படுத்தும் சகல நடவடிக்கைகளுக்கும் முப்படையினரும் சம்மதம் தெரிவிப்பு-அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ். Reviewed by Author on May 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.