அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண்ணை நியமித்த டிரம்ப்!


அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சரிதா கோமட்ரெட்டியை என்ற பெண்ணை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பெடரல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இவர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தும் பட்டம் பெற்றவர்.
அதே பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை தொடர்ந்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள பிரெட் காவனாவின் சட்ட உதவியாளராக இருந்துள்ளார்.
அமெரிக்க அரசு வழக்குரைஞா்கள் அலுவலகத்தில் குற்றப் பிரிவு துணைத் தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்து வந்த இவர். தற்போது கொலம்பியா சட்டக் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.
இந்நிலையில், சரிதா கோமட்டிரெட்டியை நியூயார்க் நகரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய பிரதேசத்தின் மாவட்ட நீதிபதியாக நியமித்து, அதற்கான பரிந்துரையை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் அனுப்பியுள்ளார்.

மேலும், உலக வங்கியின் கடன் வழங்கும் முக்கியப் பிரிவாக செயல்பட்டு வரும் மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சா்வதேச வங்கியின் அமெரிக்க பிரதிநிதியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அசோக் மைக்கேல் பின்டோவையும் டிரம்ப் நியமித்துள்ளார்.

அசோக் மைக்கேல் தற்போது அமெரிக்க கருவூலத் துறையில் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். இவா் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டபிள்யு புஷ்ஷின் சிறப்பு உதவியாளராகவும், ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார்.
ஐபிஆா்டியின் பிரதிநிதியாக அசோக் மைக்கேல் நியமிக்கப்பட்டதற்கான பரிந்துரை செனட் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரை தொடர்ந்து, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மனீஷா சிங்கை டிரம்ப் நியமித்துள்ளார்.
இவா் தற்போது அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் வா்த்தக விவகாரங்கள் துறை துணை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண்ணை நியமித்த டிரம்ப்! Reviewed by Author on May 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.