அண்மைய செய்திகள்

recent
-

என் தந்தையின் மரணத்திற்கு... பிரித்தானியா சுகாதார செயலாளருக்கு மகன் எழுதிய ஆவேச கடிதம் -


பிரித்தானியாவில் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக கூறி அரசை எச்சரித்த மருத்துவர் உயிரிழந்த நிலையில், அவரின் மகன் சுகதார செயலாளருக்கு ஆவேசமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளை கையாண்டு வரும் மருத்துவ ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்ட போது, அது குறித்து முதன் முறையாக Abdul Mabud Chowdhury என்ற 52 வயது NHS ஊழியர், பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கடிதம் எழுதி எச்சரித்தார்.
அதன் பின் அவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தார்.


Abdul Mabud Chowdhury குடும்பத்தினருடன் (Image: Intisar Chowdhur)

இந்நிலையில், இவரின் 18 வயது மகன் Intisar Chowdhury, பிரபல ஆங்கில ஊடகமான டெய்லி மிரரில் திறந்த நிலை கடிதம் ஒன்றை பிரேத்யேகமாக பகிர்ந்துள்ளார். அதில், சுகாதார செயலாளர் Matt Hancock தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Matt Hancock-க்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

அன்புள்ள Matt Hancock அவர்களுக்கு, என்னுடைய தந்தை Abdul Mabud Chowdhury இந்த நாட்டிற்காக தன்னுடைய உயிரைக் கொடுத்த NHS ஊழியர்.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக் குறையை அவர் முதலில் கண்டார்.
என் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதும் கூட, பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக் குறை குறித்து பிரதமர் போரிஸ் ஜோன்சானுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.


(Image: 10 Downing Street/Crown Copyright/PA)

ஆனால் அவரது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட, இரண்டு வாரங்களில், தன்னுடைய 52 வயதில் அவர் உயிரிழந்தார்.
என்னுடைய தந்தையின் மரணத்தில் இருந்து நீங்கள் இதை கற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
PPE(பாதுகாப்பு உபகரணங்கள்)-ன் பற்றாக்குறை எனது தந்தையின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என்பதை என்னுடைய குடும்பத்தினர் நிராகரிக்க முடியாது.
பல முன்னணி ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், அவர்கள் மரணத்திற்கிடையில் இருக்கும் அந்த நிலை குறித்து தெளிவாக தெரிகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டிலே, ஒரு தொற்று நோய் தாக்கினால் NHS-ன் நிலை, பாதுகாப்புகள் குறித்து எச்சரிக்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த நெருக்கடிக்கு தயாராவதற்கு இருக்கிறோமா?
நீங்களே ஒரு மருத்துவ நிபுணராக பணியாற்றாத காரணத்தினால், NHS ஊழியர்கள் PPE-ஐ தவறாகப் பயன்படுத்தியதாக கூறுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
PPE பற்றாக்குறை உள்ளது. அது அதிகமாக பயன்படுத்தப்படவில்லை. பற்றாக்குறை இல்லையென்று சொன்னால், அது என்னுடைய தந்தையின் மரணத்திற்கு முழு அவமரியாதை காட்டுகிறது.


(Image: PA)

மருத்துவமனைகளில் உள்ள மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது. பராமரிப்பு இல்லங்களில் உள்ள ஊழியர்களைப் போல. இரவில் அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பாதுகாப்பாக திரும்ப முடியும் என்பதை உறுதிப்படுத்த நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
நான் இந்த விஷயத்தில் உங்களை முழுமையை எதிர்பார்க்கவில்லை. ஆனால் உங்கள் தவறுகளை ஒப்புக் கொண்டு, அதில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
வைரஸுக்கு பதிலளிப்பதில் அரசாங்கத்தின் தவறுகளை ஒப்புக் கொள்ளவும், உங்களை பொறுப்பு கூற வைத்த முதல் நபராக இருப்பதன் மூலம், நான் மீண்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு அரசியல் தொடர்பு இல்லை, இது அரசியல் தாக்குதலும் அல்ல, ஒரு மனித உரிமை நெருக்கடி, என் தந்தை தனது சக ஊழியர்கள் மீது அக்கறை காட்டினார்.
அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த அவர் விரும்பினார். அதன் காரணமாகவே அவர் அப்படி கடிதம் எழுதினார். என் தந்தையின் மரணம் வீணாக இருக்க வேண்டாம்.
என் தந்தை ஒரு அற்புதமான மனிதர், NHS மற்றும் சமூக பராமரிப்பு ஊழியர்கள் அனைவருமே தங்கள் உயிர்களை இழந்தவர்கள். அவர்களை தயவு செய்து, இறப்பின் புள்ளி விவரங்களாக மாற்ற வேண்டாம்.
அன்புடன்,
Intisar Chowdhury, 18 என்று முடித்துள்ளார்.
என் தந்தையின் மரணத்திற்கு... பிரித்தானியா சுகாதார செயலாளருக்கு மகன் எழுதிய ஆவேச கடிதம் - Reviewed by Author on May 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.