அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பனை உற்பத்தி தொழிலாளர்கள்......


மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மன்னார் தீவுப்பகுதிக்குள் பனை உற்பத்தி  சார்ந்த தொழிலை மேற்கொள்ளும் சுமார் 8 கிராமங்களைச் சேர்ந்த   300 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த கிராம மக்கள் கூலித்தொழிலையும் விறகு வெட்டுதல் மட்டை வெட்டுதல் பனங்கிழங்கு மற்றும் ஒடியல் தயாரித்தல் போன்ற காலத்திற்கு ஏற்ற பனை சார்ந்த தொழிலை மேற்கொண்டு நீண்ட காலமாக தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்தனர்.

எனினும் தற்போது மிக பின் தள்ளப்பட்டுள்ள நிலையிலுள்ள குறித்த வாழ்வாதார தொழிலை மேற்கொள்ளும் மக்கள் கொரோனா நோய் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் வறுமைக்குள் வருமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
 உணவிற்குக் கூட போதிய பணம் இல்லாத சூழ நிலைக்குள் வாழ்ந்து வருகின்றனர்.

நாளாந்தம் சேகரித்து தாயரிக்கப்பட்ட மட்டைக்கட்டுகள், விறகுகள் மற்றும் நாளாந்த முயற்சியினால் தயாரிக்கப்பட்ட ஒடியல் என்பன வீடுகளில் விற்பனைக்காக தயார் நிலையில் காணப்பட்ட போதும் அவைகள் முடக்கப்பட்ட நிலையில் தேங்கிக் கிடப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.


 இவ்வாறு அனேக வீடுகளில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமதி வாய்ந்த உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்ய இயலாத நிலை காணப்படுகின்றது.
குறித்த வாழ்வாதாரத்தை இழந்து உணவிற்குக் கூட கஸ்டத்தை எதிர் கொள்ளும் 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது துயரங்களுக்கு கை கொடுக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னாரில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பனை உற்பத்தி தொழிலாளர்கள்...... Reviewed by Author on May 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.