அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் கீழ் சிறுபோகச் செய்கையில் இழுபறி நிலை.-புலவுக் காணிகளை அதிகரிக்க கோரிக்கை

மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் கீழ் சிறுபோகச் செய்கை தொடர்பான அவசர கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை மன்னார் உயிலங்குளம் விவசாயிகள் ஒன்று கூடல் மண்டபத்தில்  இடம் பெற்றது.

இதன் போது கட்டுக்கரைக்குளத்தின் நீரின் அளவு அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டி 1850 ஏக்கர் சிறுபோக நெற் செய்கையை மேற்கொள்ள மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அனுமதி வழங்க மறுத்தால் சிறு போகம் செய்யப்போவதில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டி கட்டுக்கரைக் குளத்தின் திட்ட முகாமைத்துவ முகாமையார் ஊடாக கோரிக்கை அறிக்கையொன்ரை கூட்டத்தின் தீர்மானமாக அரசாங்க அதிபருக்கு முன்வைத்துள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் அன்ரனி மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற சிறுபோக நெற் செய்கை கூட்டத்தில் அன்றைய கட்டுக்கரைக் குளத்தின் நீரின் அளவு 13.900ஏக்கர் கன அடி என்றதன் அடிப்படையில் 1250.ஏக்கரில் சிறு போக நெற் செய்கை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் விவசாயிகள் சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ளவில்லை.

இதே வேளை தற்போது கட்டுக்கரைக்குள நீர்ப்பாசன பொறியியலாளர் சிபாரிசுக்கமைவான குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து 23 ஆயிரம் ஏக்கர் கன அடி அளவு இருப்பதை சுட்டிக்காட்டி குறித்த நீரின் அளவிற்கமைவாக 1850.ஏக்கரில் நெற் செய்கை மேற்கொள்ள முடியும் என அரசாங்க அதிபரிற்கு தெரிவித்திருந்த    நிலையிலும் தீர்மானிக்கப்பட்ட 1250.ஏக்கர் அளவில் மேற்கொள்ள அரச அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய   விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு கூட்டத்தில் கட்டுக்கரைக் குளத்திட்ட முகாமைத்துவ முகாமையாளரிடம் குறித்த வேண்டுகோளை விடுத்த போது தன்னால் ஏதும் செய்ய முடியாது என்ற நிலையில் விவசாய அமைப்புப் பிரதி நிதிகள் வக்கு வாதம் கருத்து முறன்பாடுகள் ஏற்பட்டு மொத்த விவசாய பிரதிநிதிகளும் வெளி நடப்பு செய்ய முற்பட்ட நிலையில் குறித்த அமைப்புத் தலைவர் தலையிட்டு கூட்டத்தில் குறித்த அமைப்பின் கோரிக்கை அடங்கிய அறிக்கை அரசாங்க அதிபரிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கட்டுக்கரை திட்டமுகாமைத்துவ முகாமையாளர் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் முருங்கன் நீர்பாசன பொறியியலாளர்,உதவி தவி விவசாயப் பணிப்பாளர்,கட்டுக்கரை திட்ட முகாமைத்துவத் தலைவர்,கமநல அபிவிரித்தி உத்தியோகத்தர்கள்,நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள்,விவசாய போதனா ஆசிரியர்கள், பிரதேச செயலாளர் பிரிவு அபிவிரித்தி உத்தியோகத்தர்கள், வாய்க்கால் அமைப்புத் தலைவர்கள் , கமக்கார அமைப்புத் தலைவர்கள் என சுமார் 150 ற்கும் மேற்பட்டவர்கள் கழந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் கீழ் சிறுபோகச் செய்கையில் இழுபறி நிலை.-புலவுக் காணிகளை அதிகரிக்க கோரிக்கை Reviewed by NEWMANNAR on May 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.